பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

(229

துன்பம் முற்றிலும் ஒழிப்பது. உலகின் துயர் அகற்றுவது. அதுவே உண்மை இன்பம். மற்ற இன்பங்களத்தனையும் மாயத் தோற்றம், கானல்நீர் போன்ற போலி இன்பங்களேயாகும்.

மனித இனம் ஒரே தொடர்புடைய முழுப்பொருள், ஒரே நீர்ப்பரப்பு! தனி மனிதன் அதன் ஒரு துகள், ஒரு துளி! நீர் சூடு பெறாமல் ஒரு துளி சூடடைவதென்பதோ, ஒரு துளி சூடடையாமல் நீர் சூடடைவதென்பதோ எண்ணமுடியாத செய்தி. அதுபோலவே உலக நலமடையாமல், மனித இனம் நலமடையாமல், எந்தத் தனி மனிதனும் நலமடைய முடியாது. தற்பற்றவா வுடையவன் படுதோல்விக்கும். பொதுநல அவா வுடையவன் எல்லையிலா வெற்றிக்கும் அடிப்படையான மறை திறவு இதுவே.

பிறர் செல்லும் பாதையில், உலக மக்கள் செல்லும் பாதையிலெல்லாம் மலர்கள் தூவு, முள் தூவிவிடாதே! பகைவர் என்பதற்காகக்கூட எவர் பாதையிலும் முள் பரப்பாதே, மலரே பரப்பு.இவற்றைப் பிறர் நலத்துக்காகவே, உலக நலத்துக்காகவே செய். ஏனெனில் அவர்கள் வாழ்வு உன் வாழ்வே! உன் வாழ்வின் ஒரு பெரும்பகுதியேயாகும். அவர்கள் காலடியில் தைக்கும் முள் நேரடியாகவே உன் காலடியையும் தைக்கும். அத்துடன் அவர்கள் காலடியில் தைக்கும் முள்ளின் துன்பம் உன் சூழலைத் துன்ப மயமாக்கி, உனக்கும் துன்பமாக விளையாமல் இராது. ஆனால் பிறர் காலடியில் நீ தூவும் மலர்கள் பிறர் காலடி களுக்கும் உன் காலடிக்கும் மெல்லினிமை தருவதுடன், எங்கும் மணமும் பரப்பும். இதனால் உன் வாழ்வில் ஒரு சிறு பகுதியாகிய நீயும், அதன் மிகப் பெரும் பகுதியாகிய பிறரும், உன் சூழலும் பிறர் சூழல்களும் யாவும் நலமாய் அமையும்.

அடிக்குறிப்புகள்

1. "Who carry music in their heart

2.

Through dusky lane and wrangling mart,

Plying their daily toil with busier feet, Because their secret soul a holier strain repeat."

"Serene will be our days and bright

And happy will our nature be,

When love is an unerring light,

And joy its own security."

-Keble.

- Wordsworth.