(234) ||__
அப்பாத்துரையம் - 29
ஆன்மிக முழுமலர்ச்சிக்குரிய சின்னங்கள் இவையல்ல, பணிவு. அவமதிப்பு இறுமாப்பு அல்ல, பயபக்தியும் அன்பு மதிப்பும் ஆகும். இதனைச் சீன அருளாளர் லயோட்சே தம் வாழ்வுமுறை மூலமும் போதனை மூலமும் வலியுறுத்திச் சென்றார்.
லயோட்சேயின் வாழ்வில் பணிவும் எளிமையும் இடங் கொண்டிருந்தன. அதையே அவர் போதித்தார். மெய்யுணர் வுடையவன் பேசாமலே போதிக்கிறான் என்றும் அவர் விளக்கினார். அவர் மோனத்தால் வளர்த்த அறிவுத் தேகத்தின் ஆற்றல் கண்டு, நாலா திசையிலிருந்து சீடர்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டு வந்து மொய்த்தனர். அவர் மக்கள் மன்றம் வந்து பேசவில்லை.வாய் பேசாது ஒதுங்கி விலகியே வாழ்ந்தார்.ஆனால் அவர் இருக்குமிடம் மக்கள் மன்றமாயிற்று. போதனை செய்ய அவர் எங்கும் சென்றதில்லை. ஆனால் போதனைபெற அவர் இருக்குமிடம் தேடி மக்கள் சென்றுசென்று குழுமினர்.
பேரருளாளரின் மோனப் பண்புவாய்ந்த செயல்கள் மெய் யுணர்வாளர்களுக்கு வழிகாட்டும் பேரொளிகள், கலங்கரை விளக்கங்கள். அஃது அவர்கள் செல்லும் பாதையெங்கும் ஒளி வெள்ளம் பாய்ச்சி, மயக்கதயக்கமின்றி அவர்களை நேர்வழியில் இட்டுச் செல்கிறது. அம்மோனமே அவர்கட்குப் பலவகைப் படிப்பினைகளை அளிக்கிறது.
மெய்யொழுக்கமும், மெய்யறிவும் அடைய விரும்புபவன் எந்த நேரத்தில் மோனம் கடைப்பிடிக்க வேண்டும், எது பேசக் கூடாது என்பதையும் தெரிந்துகொள்ளல் இன்றியமையாதது. ஏனெனில் சரியான நாவின் அடக்கமே மெய்யறிவின் தொடக்கம். சரியான மனத்தின் அடக்கமே மெய்யறிவின் நிறைவிடம்.
நாவடக்கத்தால் ஒருவன் தன் உள்ளம் தனதாகப் பெறு கிறான். அந்த உள்ளத்தையும் இறுதியில் தன் வயப்படுத்தி யவனே மோனத்தின் முதல்வனாகிறான்.
மூடன் வம்பன் ஆகிறான். பிதற்றுகிறான். வாதிடுகிறான், சொற்களை வளரவிடுகிறான். தன் எதிரியை வாயடைத்துக் கடைசிச்சொல் தன் சொல் ஆக்கிவிட்டதாக அவன் இறுமாப் படைகிறான்.இத்தகையவன் மடமையாகிய தற்செருக்கில் தானே உழல்பவனாகிறான். அத்துடன் எந்நேரமும் அவன் தாக்குதலை