பேரின்பச் சோலை
239
இயற்கையின் மிக ஆற்றல்வாய்ந்த அழிவுச் சக்திகள் சந்தடி யற்ற செயல்களே. வெற்றியாற்றல் மிக்க உள்ளமும் அதுபோலச் சந்தடியற்ற மோன நிலையிலிருந்து செயலாற்றுவதேயாகும்.
நீ ஆற்றலுடையவனாக, பயனுடையவனாக, தற்சார்பு, தன்னம்பிக்கை உடையவனாக இருக்க விரும்பினால் மோனத் தின் அருமையையும் ஆற்றலையும் உணர்ந்துகொள். உணர்ந்து செயலாற்று. உன்னைப் பற்றியே பேசாதே. தற்பெருமை யுடையவன் உள்ளீடற்ற வெற்றுப் பேர்வழி, வலிமைக் கேடுடையவன் என்று உலகம் மிக இயல்பாகவே உணர்ந்து காண்டுள்ளது. தற்பெருமையுடையவனுடன் எவரும் ஒத்துழைப்பதில்லை. இயல்பாக ஒத்துணர்வதில்லை. அவன் தற்பெருமையே அவனுக்கு உதவட்டும் என்று விட்டுவிடு கிறார்கள். இது அவன் சூழலை அவனுக்கு எதிராக மாற்றி விடுகிறது.
சொல்லாதே, செய்! குறைகூறாதே, முன்மாதிரி காட்டு!
ம்
என்னென்ன செய்யப் போகிறேன் என்று நீ பேசிக் கொண்டிராதே. செய், செய்து காட்டு. உன் செயலே செயல் பற்றிப் பேசட்டும். பிறர் செயல்களை, பண்புகளை மதிப்பிட் டாய்ந்து அல்லது குறைகூறி உன் வலிமைத் திறங்களை எதிர்த்துக் கொள்ளாதே. உன் செயலையே நீ கருத்தாழ்ந்து திருந்தச் செய்ய முயற்சிசெய். மனமார்ந்த செயல், உள்ளத்தில் இனிமை நலத்துடன் செய்யப்படும் செயலில் மிக மோசமான, மட்டமான ஒன்றுகூட, பிறர் செயல் கண்டு குறையுரைப்பதை விட எவ்வளவோ மேலானது. ஏனெனில் பிறர் செயலைக் குறைகாணும் நேரத்தில் நீ உன் செயலை உன் மனத்திலிருந்து மறக்கடித்துக் கொள்கிறாய்.
பிறரையும் ஊக்கி உன் செயலுக்கும் நீ ஆக்கம் தேடுவ தானால், பிறர் செயலுக்கு உதவக்கூடாதென்றில்லை. அவர்கள் மோசமாகச் செயல் செய்தால், நீ அதைத் திருத்தலாம். ஆனால்
அங்கேகூட அவர்களைவிடச் சிறப்பாக நீ செயல் செய்து காட்டலாம். அப்படிக் காட்டுவதைவிடச் சிறந்த உதவி முறை வேறு இல்லை.