பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

253

பேணுபவன் தற்சிந்தனையை இயல்பாகப் பேணிவிடுகிறான். இவற்றின் இயற்கைக் கூறே துயில்.

தனிமை மூலமே தன்னைத் திருத்திக்கொள்ளாதவனை, தானாகத் தன்னைக் காண மறுப்பவனுக்கு இயற்கையின் கூறான துயில் உதவ முன்வருகிறது. ஆனால் மட்டுமீறிய ஓய்வின்மை துயிலையும் பாதிக்கமுற்பட்டுவிடுகிறது. இந்நிலையடைந்து அத்துயிலையும் பயன்படுத்தாதவனை உடலுளங்களின் கோளாறான பைத்திய நிலை கோர உருவில் அச்சுறுத்துகின்றது. துயிலில் காணும் பேய்க்கன வுருவங்கள், பித்தம் பிடித்தவன் காணும் திரிந்த உருக்கள் ஆகியவை அவன் தீயவாக்களின் இயற்கை மீறிய தோற்றங்களேயாகும்.

இயற்கை எனும் கண்ணாடியில் தோற்றும் இயற்கை மீறிய தன் தீயவா உருவங்களின் நிழல்களே அவை என்று தெரியாமல், மடமையின் செறிவால் மனிதன் மிரட்சியும் மருட்சியும் உறுகிறான். ஆனால் உயிராற்றல், இயற்கையாற்றல் இரண்டும் இத்தகைய கோர விளைவுகளைத் தன் மீது தானே வருவித்துக் கொண்ட மனிதனையும் ஆட்கொண்டு திருத்தாமலிருப்ப தில்லை.

ஓர் அன்புக் குரல், ஓர் ஆறுதல் மொழி எத்தகைய பழி காரனையும், பைத்தியத்தையும், பேய்பிடித்தவனையும் திடீரென நல்வழியில் திருப்பிவிட்டுவிடும் என்பதை நாம் வாழ்வில் காணலாம்.

தனிமையும் அன்பும் தள்ளாத் துணைகள்

வாய்மை அகன்றும்

வாய்மையின் அழிவு துன்பம் முழுதும் அழியாததானாலேயே, முழுமையான துன்பம் என்ற ஒன்று என்றும் இருக்கமுடியாததாகிறது. நாம் அந்த அழிவு நோக்கிச் செல்லுந்தோறும் தனிமையும் தனிமை நிலைகளும் மேன்மேலும் பெரிய உருவில் நம்மை மேன்மேலும் உரத்த குரலில் எச்சரித்து முழங்குகின்றன. நம் கண்ணை மூடி, காதை அடைத்துக் கொண்டு நாம் அழிவு நோக்கிச் செல்லுந்தோறும், நாம் தீமையின் ஆற்றலை நம் உள்ளத்தில் வளர்க்கிறோம். இது நம்முடன் அமைவதில்லை. நம்மைச் சுற்றிலும் உள்ள சூழலிலும் அதை வளரவிடுகிறோம்.