பேரின்பச் சோலை
(287
நேர்மை வாய்மை இலக்கை மட்டும் குறிக்கொண்டு, அவன் தன் கடமையை அப்பழுக்கின்றிக் கவனத்துடன் முடித்து, அதிலேயே கலையார்ந்த மகிழ்வு காண முடிகிறது.
முழுநிறை ஒளிபெற்று, முழுநிறை இன்ப நாட்டமுடைய வன் செயல்களை அவாத் தூண்டுவதில்லை, அறிவு தூண்டு கிறது.அவாவுடையவனைச் செயலில் ஊக்குவது பயன், நற்பரிசு. விளையாட்டுப் பொருள்களின் அவாவால் பயிற்சியில் ஈடுபடும் சிறுவர் சிறுமியர் நிலைப்பட்டதே இது. பயிற்சியின் முடிபு நற்பயிற்சியே என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். ஆனால் அறிவுடையவர் உழைப்பின் இலக்கு நல்லுழைப்பே. எனவே அவர்கள் எந்தக் கணமும் தளராத ஊக்கத்துடன் தம் ஆற்றல் முழுதும், வாழ்வு முழுதும் எக்கடமையிலும், தேவையான எச்செயலிலும் ஈடுபடுத்தச் சித்தமாயிருக்கின்றனர்.
ஆன்மிக நிலையில் அவாவாணர் சிறுவர் சிறுமியர் போன்றவர். அறிவுடையவனே ஆன்மிக நிலையில் முழு மனிதன் அல்லது தெய்விக நிலையினன் ஆவான். அவனை இயக்கப் பரிசு தேவையில்லை. அவன் வாழ்க்கையிலேயே மகிழ்கிறான்.
நன்மை தீமை சிறு பிள்ளைகளின் விளையாட்டுப் பூசலின் கட்சிப் பிரிவினை போன்றது. முழு மனிதன் எல்லாவற்றையும் நல்லனவாகக் காண்கிறான். எல்லாவற்றிலும் நலமே காண் கிறான். அவன் சிறு பிள்ளைகளைப் போலச் சிறு சிறு காரியங் களுக்காக முகங்கோணிச் சிணுங்குவதில்லை. அடுத்த கணம் துள்ளிக் குதிப்பதுமில்லை, அவன் ஒரே நிலையான இன்ப அமைதி கொள்கிறான். அவ்வின்பம் இடையறாதது, தளராதது, மாறாதது. ஏனெனில் அது வாழ்வின் ஒழுங்கமைதிகளின் இழையோடு இழையாடி இசைவது.
வாழ்வின் மற்றப் பண்புகள் யாவும் கருவிப் பண்புகள். வாழ்வின் இலக்கைச் சென்றடைவதற்கான படிகள், வகை துறைகள். ஆனால் பேரின்பநிலை இவற்றுள் ஒன்றல்ல - அதுவே இலக்கு, அதுவே வாழ்வின் நிறைவு! அதுமட்டுமன்று. அதுவே வாழ்வின் இயற்கைநிலை! வாழ்வின் தொடக்கம் அதுவே. தொடக்கத்தில் அருமையறியாத நிலையில் இருந்து, வாழ்வு முழுதும் மறைவுற்று ஒளிவீசி, இறுதியில் முழுநில வொளியாய்ப் பாலொளி பரப்புவது.