பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 29

290 || உலகியல் வாழ்வு, ஆன்மிக வாழ்வு என்றும் வேறுபடுத்தி, முரண் பாடாகக் காட்டித் துண்டுபடுத்தி, சமயத்தின் பெயராலேயே அவர்கள் மக்களை விலங்கு நிலைக்கு மேன்மேலும் மக்களிடையே வளர்த்துச் செறிய வைத்து, வானுலகத்தின் பெயர் கூறிக் கொண்டே நரகவாழ்வு பரப்புகின்றனர். இக்கேடுகளிலிருந்து நாம் தப்பிப் பிழைக்க வேண்டுமானால் ‘உலகம் ஒன்று, உலகின் அமைதி ஒன்று' என்ற முதற்பாடம் நம் வாழ்வு முழுவதும் வலியுறுத்தப்படல் வேண்டும்.

உலகியல் வாழ்வு, ஆன்மிக வாழ்வு வேறுவேறல்ல

உலகுக்கு, நில உலகின் உலகியல் வாழ்வுக்கு ஒரு நீதி, உயர் உலகுக்கு, அக உலகின் ஆன்மீக வாழ்வுக்கு வேறொரு நீதி என்பது பித்தர் கூற்று, பேயர் கோட்பாடு.

உலகியலில் மனிதர் பற்றுறுதியுடன் சில நேரொழுங்கு களைச் செயலில் பின்பற்றுகிறார்கள். அவற்றைப் பிசகில்லாமல் அணுப்பிழையாமல் பின்பற்றினால் வெற்றி என்றும், தெரிந்து மீறினாலும், பின்பற்றுவதில் தெரியாமல் வழுவினாலும் தோல்வி என்றும் அனுபவவாயிலாகவே அறிந்துள்ளனர். இத்தகைய தவறுகள் தவறு செய்பவனுக்கு மட்டுமல்ல, மக்க ளுக்கே அழிவு சூழ்வதனையும் அறிந்துள்ளனர். எடுத்துக் காட்டாக, பாலம் அமைப்பவன் பொருளின் பளு அல்லது நில ஈர்ப்பு, மூலப் பொருள்களின் உறுதி, கட்டுமானங்களின் இணைப் புறுதி ஆகியவற்றைக் கணித்தே பாலம் அமைக்கிறான். இவற்றில் அவன் அறியாமை, அறிவுக் குறைபாடு அவன் தொழிலுக்கு மட்டும் கேடன்று. அதன் முதற்கேடு சமுதாயத்துக்குரிய இடராகவும், துணைக்கேடாகவே அவன் தொழிற்கேடும் விளைகின்றன.

சமுதாயத்தின் இவ்விடர்களே, சமுதாய நலன் நோக்கமே, பாலம் கட்டும் தொழிலின் அடிப்படை. ஆகவே மேலீடாகக் காண்பதுபோல, பாலம் கட்டும் தொழில் பாலம் கட்டுபவனுக்கு மட்டும் உரியதல்ல. சமுதாயம் முழுமைக்குமே உரியது. தொழில் என்றும் வாழ்வு என்றும் பிரிக்கும் பிரிவுகள் உண்மையில் ஒரே சமுதாய வாழ்வின் இருதிசைக் கூறுகளேயன்றி வேறன்று. சமுதாய நலம் சமுதாய வாழ்வுக்குரிய நேர்கூறு. அதற்காகவே, சமுதாயச் சார்பாக நின்று, அவர்கள் அனைவரும் செய்ய

க்