(294
அப்பாத்துரையம் - 29
இரக்க எண்ணுவதில்லை. விலை கொடுத்தால்தான் கடைக்காரர் தருவர். கேட்பது பொருளையன்று, விலையையே என்பதை எவரும் அறிவர். 'விலை கொடுத்துப் பொருள் பெறுவதே வாங்குபவர் நீதி, விலை பெற்றுப் பொருள் கொடுப்பதே விற்பவர் நீதி' என்பதையும் எவரும் அறிந்தொப்பியுள்ளனர். அதுவே வாணிக நீதி, வாணிக இயல்பு என்றும் எவரும் அறிவர். விலை கொடுத்தபின் கடைக்காரர் பொருள் கடைக்காரருக்கு உரியதன்று, வாங்கியவர்க்கு உரிமையாகிவிடுகிறது.
உலகியல் புறவாழ்வின் இதே வாணிக நீதி அகநிலை ஆன்மிக வாழ்வுக்கும் முற்றிலும் பொருந்துவதேயாகும். கொடுப்பதற்கேற்ப வாங்குவது, வாங்குவதற்கேற்ப கொடுப்பது, இவற்றிடையேயுள்ள தொடர்பே விலை என்ற வாணிக அமைதிச் சின்னம். இதுபோன்றே இன்பம், அமைதி, ஆற்றல் ஆகிய பண்புகளைப் பெறவிரும்புபவர் அவற்றுக்குச் சமமான தன்மறுப்பு, அவா மறுப்பு, அன்பு ஆகிய பண்புகளைத் தர வேண்டும். இதுவே ஆன்மிக அமைதி. உலகியல் வாழ்வில் இந்த இருதிசை இயக்கத்தின் தொடர்பு விலையாக அறுதியிடப் படுவது போலவே, ஆன்மிக வாழ்விலும் கொடுக்கல் வாங்கல் களின் தொடர்பு தகுதியால் அறுதியிடப்படுவது ஆகும். விலை கொடுத்த பின்பே பொருளுக்கு ஒருவன் உரியவன். அதுபோலத் தகுதிவாய்ந்த தன் மறுப்புச் செய்தபின்பே, பண்புகளுக்கு அவன் உரியவன் ஆகிறான்.
ஆன்மிகப் பண்டமாற்று
உலகியலில் பருப்பொருளுக்குப் பதில் பருப்பொருளே பண்டமாற்றுச் செய்கிறோம். ஆனால் அவற்றின் தொடர்பு குறிக்கும் எடைப்பண்பு விலை. அஃது எடையே பணம் என்ற பொருளால் அளக்கப்படுகிறது. இந்த அளவை உண்மையில் பண்டங்களை ஆக்கும் உழைப்பின் அளவும், அருமையும் அருமையளவுமே என்பதையும்; உழைப்பின் அளவைப் பணத்தின் அளவும், உழைப்பின் அருமையைப் பணத்தின் அருமையும் குறித்துக்காட்டுகின்றன என்பதையும் கார்ல் மார்க்ஸ் போன்ற உழைப்பியல் பொருளறிஞர் சுட்டிக்காட்டு கின்றனர்.