பேரின்பச் சோலை
303
உழைப்போ உழைப்பின் பயனான தகுதியோ இன்றிச் சென்று விடத்தக்க அருநிகழ்வு எதுவும் இயற்கையின் நியதியில் இல்லை.
இயற்கை நியதியின் எல்லையிலே அவன் தன் முயற்சியால் செய்யத்தகும் சிக்கனமெல்லாம், வழிகளிலே சுற்று வழிகள் இருந்தால் அறிந்து விலக்கி நேர்வழி, குறுக்குவழி காண்பதும், கடுவழிகள் இருந்தால் விலக்கி எளியவழி காண்பதும் மட்டுமே.
நேரான, எளிய வழி அறிந்ததன்பின் அந்த நல்ல, சுருங்கிய எளிய வழியில் தேவைப்பட்ட அளவு முயற்சி முற்றுவித்த பின்னரே, ஒருவன் தன் உழைப்பின் பயனாகத் தன் குறி சென்றடைய முடியும்.
முழுநிறை மனிதப்படி - கடவுட்படி
இவ்வமைதிகள் மேற்பார்வைக்குப் பலவாகத் தோற்றி னாலும், பலவான அத்தோற்றம் இட, காலச் சூழல் சார்ந்ததே. உண்மையில் இவையும் இவைபோன்ற பிறபல சின்னஞ்சிறு ஒழுங்கமைதிகளும் இயற்கையின் ஒரே அமைதியின் கூறுகள் அல்லது திசைகளே. இயற்கை அமைதி, உலகியல் அமைதி, ஆன்மீக அமைதி என்பதுகூட அந்த ஒரே பேரமைதியின் பல கோண நோக்குகளேயன்றி வேறன்று. நாம் மேலே ஒன்றை ஒன்றினுக்கு உவமையாகக் கூறியதுகூடப் புற உவமையன்று, அக உவமை. ஏனெனில் அவை ஒரே அமைதிக்கு ஒத்த பல அமைதிக் கூறுகளேயாகும்.
உலகியல் வாழ்வு ஆன்மீக வாழ்வு என்பவை ஒரே இயற்கை வாழ்வின் இரு முகங்களேயன்றி வேறு வேறல்ல. இந்த எல்லா முகங்களும் எல்லாக் கூறுகளும், சேர்ந்ததே முழுவாழ்வு, முழு மனிதத் தன்மை. அதுவே பேரின்பம், தெய்விக வாழ்வு. இயற்கை யமைதிகள் அத்தனையையும் பின்பற்றியே நாம் முழு இன நிறைவை எய்த முடியும். ஏனெனில் அரசியல் சட்டங்களைப் போல, இந்த இயற்கை அமைதிகளில் நடைமுறையிலுள்ளவை. நடைமுறையிலில்லாதவை என்ற வேறுபாடு கிடையாது. எல்லா அமைதிகளும் - மிகச் சிறு நுண்ணமைதிகூட - நடைமுறையி லுள்ளவையே, முழுதும் செல்லுபடியானவையே. ஏனெனில் பெரிதும் சிறிதுமான அவை யாவும் உண்மையில் ஒரே அமைதியின் கூறுகள்.