பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

311

நிலவுபவை. மறையாதவை. தோழமைகள், கரிமகிழ்வுகள், வாய்ப்பு நலவளங்கள் ஆகியன இனியவையே, - ஆனால் இவை மாறுபடுவன, மறைவன. தூய்மை, மெய்யுணர்வு, வாய்மை பற்றிய அறிவு ஆகியவை இவற்றிலும் இனியன. அவை மாறாதவை, மயங்காதவை, மறையாதவை.

மனிதன் உலகில் செல்லும் திசையெங்கும் தன் உலகியல் உடைமைகளைக் கொண்டு செல்ல முடியாதென்றில்லை. ஆயினும் அவை தாமாக அவனைவிட்டுச் செல்லாமலிருக்க முடியாது, சென்றே தீரும். அவன் அவற்றையே நம்பி, அவற்றின் மீதே தன் இன்ப அவாவை நாட்டினால், மிக விரைவில் அவன் ஆன்மிக வறுமைக்கும் வெறுமைக்கும் ஆளாகிவிட நேரும். ஆனால் ஆன்மிகப் பண்புகளை ஈட்டி, அவற்றின்மீது அன்பாட்சி நாட்டியவன் அவ்வின்பத்துக்காதாரமான பண்பு களிலிருந்து எளிதில் பிரிக்கப்படமாட்டான். அவை என்றும் அவனை விட்டகலமாட்டா. உலகில் அவன் எங்கே, எச்சூழலில் ஏகினாலும், அவை அவன் பிரியா உடைமையாக அவனுடனே தங்கும். ஈறிலாப் பேரின்ப எல்லை செல்லும்வரை இருந்து அவை அதனுள் ஒன்றுபடும். அதன் நிறைவு வந்தெய்தி, அதில் நிறைவு பெறும்வரை அது அவனிடம் வளர்ச்சியுறும்.

முடிபின் முடிபு இன்பத்துள் இன்பம்

இந்த இன்ப முடிபுகளை நுகர்ந்து அவற்றின் இன்பப் பண்புகளால் இன்ப ஒளியின் கனிவு எய்தியவன் தனதென்னும் நிலையும், தான் என்னும் நிலையும் மறைகின்ற கட்டத்தை எய்தும் தறுவாயில், நிறைநீளின்பப் பேரொளியில் நுழைவுறு

கிறான்.உடலுடனே, வாழ்வுடன் வாழ்வாக வாழ்ந்துகொண்டே அவன் கடவுளரசு, தெய்வீக அரசு, உலைவில் அமைதி (நிர்வாணம்), பொன்னுலகு, புதியஜெருசலம், ஒலிம்பஸ் மாமலை, மேரு, வல்ஹாலா (பண்டைச் செருமானிய வானவ ருலகு), கயிலை, வைகுண்டம் எனப் பல காலங்களில் பலவாறு பல்வேறு மெய்வழிகளால் சுட்டப்படும் பேரின்ப வாழ்வு என்னும் பொன்னவிர் பூம்பொழிலில் உலவப் பெறுகிறான். முடிவின் முடிபு, ஒருமையில் ஒருமை, இன்பத்தின் இன்பம்,மெய்மையின் மெய்மை அதுவே.