பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்தியை எதிர்த்திட வாரீர்

இந்தியை எதிர்த்திட வாரீர் - நம்

இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர் ! - இந்தி முந்திய காலத்து மன்னர் - நம்

முத்தமிழ் நாட்டினில் தொத்திடு நோய்போல் வந்த வடமொழி தன்னை - விட்டு

வைத்த தனால்வந்த தீமையைக் கண்டோம் ! - இந்தி

செந்தமிழ் தன்னில் இல்லாத - பல

சீமைக் கருத்துகள் இந்தியில் உண்டோ ?

எந்த நலம்செய்யும் இந்தி - எமக்

கின்பம் பயப்பது செந்தமிழன்றோ!- இந்தி தென்னாடு தான்எங்கள் நாடு - நல்ல செந்தமிழ் தான்எங்கள் தாய்மொழியாகும் புன்மைகொள் ஆரிய நாட்டை - எங்கள் பொன்னாட்டினோடு பொருத்துதல் ஒப்போம் ! - இந்தி இன்னலை ஏற்றிட மாட்டோம்- கொல்லும்

இந்தியப் பொதுமொழி இந்திஎன் றாலோ

கன்னங் கிழிந்திட நேரும் - வந்த

கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்! - இந்தி

பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ்மண் பதிப்பகம்

2. சிங்காரவேலர் தெரு. தியாகராயர் நகர்.

61060T600601 - 600 017.

தொலைபேசி : 044-24339030

செல்பேசி

9444410654