பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

அப்பாத்துரையம் - 29

செய்வது ஆன்மீக ஆற்றற்கேட்டை அல்லது அகத்தளர்வைப் பெருக்குகிறது.சிறுவினைகளில் மனிதன் காட்டும் தளர்ச்சி அவன் சிறு பண்புக் கூறுகளின் தளர்ச்சியாய் மட்டும் அமைவ தல்ல. அக்கூறுகளின் தொகை மொத்தமான அவன் வாழ்க்கை முழுவதின் தளர்ச்சியாய் முடிகிறது. தவறான வினைகள், தவறான பண்புகளை நாம் பழிகள் என்கிறோம். அவற்றால் கடுந்துயரம் விளைகிறது என்பதையும் எவரும் அறிவர். ஆனால் அகத் தளர்ச்சியின் பயன்கள் இந்தப் பழிகளின் பயன்களைவிடக் கொடியன. ஏனெனில் அகத்தளர்ச்சிதான் தோல்வியையும் துன்பங்களையும் தருவதுடன், இத்தவறான வினைகளையும் பழிகளையும் தவறான அகப் பண்புகளையும் வளர்த்து அவற்றின் மூலம் துயர்விளைவு பெருக்குகிறது.

குருதி உரம் பெற்றதாயிருந்தால், அது நோயணுக்கள் பரவாமல் தடுத்து உடல் நலத்தைப் பேணும். அதுபோல, பண்பு உரம் பெற்றதாயிருந்தால் பழிகளுக்கு வித்தான அகத்தின் தீய பண்புகளை அகற்றி உளநலத்தைப் பேணும். சிறு வினைகளில் முழு ஆற்றல் செலுத்துபவர் அகவலிமை பேணிப் பண்பு உரம் பெறுபவர். ஆதலால் அவர்கள் உளநலமும் அதன் பயனான வாழ்க்கையின் வெற்றியும் உடையவர் ஆகின்றார்கள். உடல் வலிமைக் கேடும் உள வலிமைக் கேடும் உடையவர்கள்கூட, சிறுவினைகளில் கருத்துச் செலுத்துவதன் வாயிலாக, விரைவில் இதே உளநலத்தையும், உடல் நலத்தையும் மீட்டும் பெறும் வகை காண்பார்கள். சிறு வினைகளில் கருத்துச் செலுத்தாத எவரும் இவற்றை அடைந்து வாழ்க்கையின் மெய்யான மேம்பாடு பெறுதல் இல்லை. மிக உடலுரமும் உளவலிமையும் ஏற்கெனவே கொண்டவர்கள் சிறுவினைகளைப் புறக்கணித்து அவற்றில் தளர்வு காட்டினால் தொடக்கத்திலிருந்த நலன்களும் கெட்டுக் கேடடைதல் உறுதி.

வளர்ச்சிக்குரிய எழுதாச் சட்டம்

வளர்ச்சிக்குரிய எழுதாச் சட்டம், இயற்கை அமைதி ஒன்று உண்டு. “உடையவனுக்கு மேலும் தரப்படும். இல்லாதவனிடம் ஒட்டியிருக்கும் ஒரு சிறிதும் அகற்றி எடுத்துக் கொள்ளப்படும்.” விவிலிய ஏடு தரும் இந்த அறிவுரை சொல்லில் மிக எளிது. பொருளில் மிக ஆழமானது. அவ்வளவு எளிதில் உணர்தற்