பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

அப்பாத்துரையம் - 29

மெய்ப்பொருள் இதுவே.நற்பண்புடைய, பண்புரமுடைய செயல் ஆகூழாய், மேலும் நற்பண்பும் வளமும் பெருக்கும். அற்பண்புடைய, பண்புரக் கேடுடைய செயல் போகூழாய், மேலும் அற்பண்பும் அழிவும் பெருக்கும் முயற்சியுடன் பொரு ளீட்டுபவன் அப்பொருளை முதலீடாகக் கொண்டு, மேலும் ஆதாயம் பெருக்குகிறான். அவன் புதிய முயற்சிகள் சிறி தானாலும், முதலீடான ஆகூழின் காரணமாக, மிகுதி பயன் அல்லது ஆதாயம் தருகிறது. முயற்சியில் குன்றியவன் வறுமை இதுபோல இல்லாமை அஃதாவது வறுமை முதலீடாகி, போகூழுருவில் புதிய முயற்சிகளைக் கெடுக்கிறது. பெரு முயற்சிகளும் சிறுபயன் தருகின்றன அல்லது பயன்தராமலே போகின்றன; பொருளியல் வாழ்வில் காணும் அதே ‘செல்வ - வறுமை’ப் பண்பை நாம் வாழ்க்கைத் துறைகள் எல்லாவற்றிலும், புறவாழ்விலன்றி அதன் அகத்தூண்டுதலான அகவாழ்விலும் ‘ஆகூழ்-போகூழ்’, வடிவில் காணலாம்.

செல்வத்துள் செல்வம்: அருள்

து

முயற்சியின் உறுபெரும்பயன், உறுபெரு விளைவு செல்வம். அதன் வளர்ச்சிக்கு எல்லையில்லை. அவ்வெல்லையைக் ‘கடவுட் செல்வம் அழியாச் செல்வம், குறையா நிறை செல்வம், பொங்கற் செல்வம் என்று கூறலாம். இது போலவே முயற்சியின்மையின் உறுபெரு விளைவு, உறுபெருவறுமை, இன்மையுள் இன்மை ஆகிறது. வறுமையின் இவ்வெல்லையைக் கடவுட் செல்வத்தின் வித்தாகிய முயற்சியைத் தெய்வ அறிவாளர் அல்லது அறவோர், தெய்வக் கலைஞர் அல்லது அருளாளராகிய திருவள்ளுவர் போன்றோர் உச்சிமேற்கொண்டு புகழ்வது இதனாலேயே. ஆனால் நல்லகாலமாக, கடவுட் படைப்பில் கடவுட் பண்பே ஏற்றமுடையதாயமைந்துள்ளது. கடவுட் பண்புக்கு வித்தாக முயற்சி அமைந்துள்ளதுபோல, அழிவுப் பாழுக்கு வித்தாக எதுவும் கிடையாது. முயற்சியின்மை அத்திசையில் நம்மை இட்டுக் கொண்டு செல்லும். ஆனால் இது முயற்சியின் எதிர் மறை மட்டுமேயாதலால், முயற்சியின் நல்வினையைக் குறைக்க, தடுக்க உதவுமேயன்றி, புதுத் தீமை பெருக்கிவிட முடியாது.

நற்பண்புகளின் நிறைவான 'கடவுள்' பற்றிக் கூறும் அறவோர், அருளாளர் பெரும்பாலும் அதற்கு நேரான எதிர்