பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

43

முனிவரை மதிப்பதில்லை; பூசிப்பதில்லை. அன்புகூடச் செலுத்துவதில்லை. இரக்கம் காட்டுவதுமில்லை. புறக்கணித் தொதுக்கிச் செல்கின்றனர். நூறாயிரத்தில் ஒன்று குறைந்தால், அது நூறாயிரமல்ல; கோடியில் ஒன்று குறைந்தால், அது கோடியல்ல என்ற பழமொழிகள் இதனை நமக்குக் கணித்துக் காட்டுகின்றன.

சிறு தீமைகளுக்கு இடங்கொடுப்பவனின் நிறைதவ வாழ்க்கை அவனுக்கும் நலம் செய்யாது போகின்றது. அவன் நன்மைகளுக்கு இருக்க வேண்டிய சமுதாயச் செல்வாக்கு, சமுதாயத்தில் பரவும் நல்வாய்ப்பு இல்லாது போகின்றது இத்தகைய பலர் தம் சிறு வழுக்களைப் புறக்கணித்துவிட்டுத் தம்பெரு நலங்களை உலகில் பரப்ப, உலகில் ஒழுக்கம் நிறுவப் பாடுபடுவதுண்டு. ஆனால் தம் சிறு வழுக்களில் காட்டும் அவரது புறக்கணிப்பே அவர் ஆண்மையின் உரையாணி, அளவுகோல் ஆகிவிடுகிறது. அவர் நற்பண்புகள் முழுதும் அச்சிறுமையின் தோல்வியை அளவு கோலாகப் பெற்றுச் சிறுத்து நலிவுற்று விடுகின்றன. அவர் சிறியவராகி, சமுதாயத்தில் வெறுத்தொதுக்கப்பட்டவர் ஆகிறார்.

மாசு தீராதவர் ஞானியாகார்

புரையிலாத் தேக்கும் தன்னகம் ஒரு பொறி தங்க விட்டால் புல்போல் பொசுங்கிவிடும். அதன் மீது ஏற்றப்பட்ட அரும் பெரும் பாரமுழுதும் புல்மேல் ஏற்றப்பட்ட பாரம்போல் பொன்றிக் கெடும். சிறு தீமைகளுக்கு இடந்தந்துவிட்டு அதைத் திருத்தாமல் உலகைத் திருத்த முற்படும் நல்லார், அறவோர் நிலை இதற்கீடாகும். அவர் பேசும் அறத்தைவிட அவர் வாழ்வில் காணப்படும் சிறு தீமையே எங்கும் தம்பட்டமடிக்கப்படும். அவர் உள்ளார்ந்த நலங்களின் மதிப்புக் கணிக்கப்படாமல் அச்சிறு தீமையின் நிழலே கருமுகில்போல் நின்று அவர் அறிவொளி பரவாமல் தடுத்துவிடும்.

அவரை யாரும் நாடுவதில்லை, தேடுவதில்லை - மடமையி னுள்ளே அறிவை யார் துருவிக்காண எண்ணுவர்? சமுதாயம் அவர்களை நம்புவதில்லை. புயலில் புல்மீது யாரே சாயக் கருதுவர்? அவர் சொற்கள் செவிடர் காதுகளில் விழும்