பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

அப்பாத்துரையம் - 29

கூக்குரல்களாய்விடும். அவர் தலைமைப்பதவி, பின்பற்ற ஆளில்லாத் தலைமைப் பதவியாய், கேலிக்கும் அவதூறுக்கும் உரியதாய்விடும்!

செயல் விளைவற்ற அவர் அறிவு பொருளற்ற நிழலாக ஊசலாடும்! தன்னடக்கமற்ற அவர் அனுபவமெய்ம்மைகள் உள்ளே காற்று ஒழுகிப்போய்விட்ட தொய்வகக் குழாய்களாய்ச் சோர்வுற்று வீழும்! அவர் உள்ளுரமற்ற பாசம் ஒலியற்ற எதிரொலியாய், ஆவியுருவில் உலவும்!

வ்

முன்கருதலின்றி, அடிக்கடி உணர்வின்றி மனிதர் வாழ்வில் இடம் பெற்றுவிடும் தனிமனித வழுக்கள் எண்ணற்றவை. காற்றில் பறக்கும் தூசுபோல, நன்னீரிலும் இடம்பெற்று மிதந்து திரியும் சிறு மாசுகள்போல, அவை தொகையில் பல -பொது நோக் குக்குப் புலப்படாதவை. அறிவை நாடுபவனுக்கு இவற்றால் நேரிடும் இடர்கள் மிகமிகப் பெரியன. அறிவுடையவன் இவ் விடர் கண்டு எச்சரிக்கையுடன் அதை விலக்கித் தன் உயிர்க்கு உறுதி தேடுகிறான். அத்துடன் பெரும்பாலோர் புறக்கணித் தொதுக்கும் சிறு நற்கருத்துக்களில், நற்செயல்களில் முழு மனதுடன் ஈடுபடுகிறான். இவற்றால் அவன் நாள்தோறும் தன் பண்புகள் மீதுதான் பெறும் சிறு வெற்றிகள்தான் அவனுக்கு மற்றவர்கள் கண்பார்வையிற்படாது மறைந்து உலவும் பேரின்பப் பெருவெளியில் பறந்து தவழும் ஆற்றல் தருகின்றன.

று

சிறுவழுக்களைப் பேரிடர்களின் கருவிதைகள் என்று கருதுபவன் ஒரு ஞானியாய்விடுகிறான். அவனுக்குச் சிறு கருத்துக்கள், சிறு செயல்களின் தொலைப்பெரு விளைவுகள் உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளக்கமுறுகின்றன. நாள் தோறும் அவன் நடந்து கொள்ளும் முறைமைகளில் உள்ள மிகச்சிறு நுட்ப நுணுக்கங்களின் செம்மை அவன் வாழ்வையும் வாழ்வின் பண்பையும் எவ்வாறு செம்மைப்படுத்துகின்றன என்பதை அவன் காண்கிறான். அவற்றின் சிறு பொல்லாங்குகள் அவ்வாழ்வையும் பொல்லாங்குகளுக்கு இரையாக்குகின்றன என்று அவன் உணர்கிறான். இவற்றில் ஓயா விழிப்புடன் இருந்து அவன் தன்னைத் தற்காத்துக் கொள்கிறான். தன்னைத் தூய்மைப்படுத்திப் படிப்படியாக சிறிது சிறிதாகத் தன்னை முழுநிறைவு படுத்திக் கொள்கிறான்.