பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

அப்பாத்துரையம் - 29

ஆகின்றன. சிறு கைதுறப்புக்கள், விட்டுக்கொடுப்புக்கள், சகிப்புத் தன்மைகள், தன்னடக்க வெற்றிகள் கூடியே வீறுமிக்க உயர் உரவோரின் ஆற்றல் ஆகின்றன.

வாழ்வின் சின்னஞ்சிறு செயல்களின் தனி நேர்மைகளே திரண்டு ஒரு மனிதனின் நேர்மை வாழ்வாகின்றன.

பெருந்தன்மையுடைய மனிதனென்பவன் தன் ஒவ்வொரு நுண்ணிய இயக்கத்திலும், சிறு செயலிலும் சொல்லிலும் கருத்திலும் பெருந்தன்மையுடையவனே.

பன்மையில் ஒருமை மெய்ம்மை - தெய்வப்பண்பு அதுவே!

கணநேரக் கருத்துக்கள், செயல்கள் கணத்தில் மிதக்கின்றன அல்லது கணத்துடன் போய்விடுகின்றன என்று நினைப்பது போலப் பெருந்தவறு வேறில்லை. அவற்றிலிருந்து வாழ்வு தொடர்பற்றுத் துண்டுபட்டு ஓடுகிறது என்று நினைப்பதும் மடமையேயாகும். ஏனெனில் அவை வாழ்க்கையுடன் தொடர்புடையவை மட்டுமல்ல, அவையே வாழ்க்கையின் மூலமுதல் கூறும் அடிப்படையும் ஆகும்.

அது சரிவர உணரப்பட்டால், உலகின் ஒவ்வொரு பொருளும் திருநிலையுடையது என்பது தெரியவரும். ஏனெனில் அவை வாழ்வுடன் இன்றியமையாத் தொடர்புடையவை.

வாழ்வின் ஒவ்வொரு செயலும் தெய்வத் தன்மையுடையது. ஏனெனில் அவை வாழ்வின் ஒளிக் கூறுகள். எல்லையற்ற சிறு நுண் பொருள்களின் மாயப்பன்மைக்குள்ளாகவே ஒரு தன்மை யுடைய மெய்ம்மை புதையுண்டு கிடக்கிறது. ஆகவேதான் பல நுட்பங்களைக் கையாளும் திறமே அறிவுப் பெருந்திறமாகக் கருதப்படுகிறது.

3உடைமைகள் மாறுவன; நம் உளங்கருதும் கருத்துத் திடமுற மாறும், தேரா உணர்ச்சிகள் இங்குமங்கும் இடமுறவே ஊசலாடும், இயங்கும் இந்தப் புயலில் கடமை ஒன்றே மிகை குறையின்றி எங்கும்நிலை/பெறுமே!

முழுமொத்தமாக உன் வாழ்க்கையை நீ வாழ்ந்துவிட முடியாது.அணுவணுவாக, கணுக்கணுவாகத்தான் அதை நடத்த