பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

அப்பாத்துரையம் - 29

நிழலிட்டால்கூட, சிறு கணங்களை ஆட்கொள்ளாத நிலையில் அவற்றை வென்றாளும் ஆற்றல் அவனுக்கு இருக்கமாட்டாது. ஏனெனில் தடைகள், தடங்கல்கள் பெருங்காரியங்களிலும் உண்டு; சிறு காரியங்களிலும் உண்டு. சிறு காரியங்களின் சிறு தடங்கல்களைக் கண்டஞ்சுபவன் பெருங்காரியங்களின் பெருந் தடங்கல்களை எதிர்த்து நிற்க மாட்டான். நேர்மாறாகச் சிறு காரியங்களில் பெருந்தடங்கல் ஏற்பட்டாலும் அதை அஞ்சாது எதிர்த்துநின்று வெற்றி கண்டு விட்டவனுக்குப் பெருங் காரியங்களிலே தடங்கல்கள் சிறிதாகவே இருக்கும். அவன் வெற்றி இன்னும் உறுதி. மேலும் சிறு காரியங்களின் சிறு தடங்கல்களை எதிர்த்து வெற்றிபெறுந்தோறும், பெருங் காரியங்களை எதிர்த்து திர்த்து வெல்லும் ஆற்றல் மனிதனிடம் பெருகுகிறது.

வெற்றி மந்திரம், பொதுநல ஆர்வம்

உன் தற்போதைய சிறு கணத்தின் கடமைகள், கட்டுப் பாடுகள், சூழல்சார்ந்த இடர்களை வெல்வதில் உனக்கு உதவும் அரும்பண்பு ஒன்று உண்டு. அதுவே தன்னல மறுப்பு. 'தடங்கல்கள் உனக்கெனத் தோன்றியவையல்ல. உலகுக்கு, வாழ்வுக்குப் பொதுவானவை' என்ற எண்ணம் உன்னைத் தனக்கென முயலும் தன்னலச் சூழலிலிருந்து உயர்த்திவிட வேண்டும். இத்தன்னலமற்ற பொதுநல உள்ளம் உனக்கு ஏற்பட்டுவிட்டால், உன் உறுதி, உன் ஆற்றல் பன்மடங்காகும். அத்துடன் பொது நல ஆர்வம் எதிர்ப்பை மட்டுமன்றி, தோல்வியைக்கூடச் சட்டை பண்ணாது. இப்பண்பு உன் விடாமுயற்சியை, வெற்றி பெறும்வரை தளராது உழைக்கும் ஊக்க ஆற்றலை, ஆக்கத்தை வளப்படுத்தும்.

மனக்குறை, கவனக்கேடு, பேரவா, நப்பாசை ஆகிய பகைப் பண்புகளிலிருந்து இது உன்னைக் காக்கும். உன் முயற்சிக் கோட்டையை உரமிக்கதாக்கும். பெருமையை எதிர்பாராத உன் கண்முன், பெருமையும் - பிறர் ஏங்கி, ஏங்கி எய்த முடியாத வெற்றியும் வந்து ஒளிவீசும்.

-

தன்னல அவாவில் தோன்றும் ஏக்கம், மனக்கசப்பு உன் பொதுநல அவாவை அடுக்காது.அதன் தளர்ச்சி உன் வெற்றியைத்