பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

தடங்கல்களல்ல, தளர்வகற்றி ஊக்கும் பண்புகள்

55

இன்னல்கள், இடர்களின்றி முன்னேற்றமில்லை, வளர்ச்சி யில்லை, உயிர் மலர்ச்சி இல்லை. அவை இன்றேல் உலகம் இயங்காது தேக்கமுற்று நலியும். மனித இனம் புதுமையின் உயிர்ப்பில்லாமல் அழிவுறும். புறநோக்கில் தடங்கல்கள் போலத் தோற்றினாலும் இடர்கள், இன்னல்கள் உண்மையில் உலகை இயக்கி ஊக்கும் அடிப்படைப் பண்புகளேயாகும்.

இடர்களைக் கண்ணுற்றபோது மனிதன் மறுகுகிறான். இது மடமை. அவற்றைக் கண்ணுற்றவுடன் அவன் மகிழ வேண்டும். இதுவே அறிவுடைமை. ஏனெனில் ஒவ்வோர் இடரும் உயிர்த் துடிப்பற்ற அவன் போக்குக்கு உயிர்த் துடிப்பு உண்டுபண்ணுவது ஆகும். ஆர்வத்தில் தொடங்கி ஆர்வக்கேட்டை அவன் வாழ்க்கை எட்டும் சமயமே - மெய்யறிவில் தொடங்கி அது இழந்து இயந்திரம்போல அவன் இயங்கத் தொடங்கிய வேளையிலே அவன் செல்லும் பாதை தவறவிட்டது என்று காட்டுபவையே தடங்கல்கள், இடர்கள்.

வாழ்க்கையின் ஒவ்வோர் உயிர்த்துடிப்பும், இங்ஙனம் ஓர் இடரிலிருந்தே தொடங்குகிறது. ஆனால் உயிர்ப் பண்பிலிருந்து பாதை விலகத் தொடங்கும் சமயமே, அடுத்த இடர்வந்து பாதையை மீட்டும் பண்பின் தடத்தில் திருப்புகிறது அல்லது புதிய ஆக்கப்பண்பின் திசையில் செலுத்துகிறது. வண்டிகள் திருப்பத்தில் வழக்க மீறிய மிகுதிப்படி ஆற்றலைப் பயன் படுத்துவதுபோல, இத்திருப்பு கட்டங்களிலும் உயிர் தன் மிகுதிப்படி ஆற்றலை ஈடுபடுத்துகிறது. இது பாதையைத் திருப்புவதற்கு மட்டுமல்ல, செயல்படாத் திறங்களைச் செயற்பட வைத்து முழு உயிராற்றல் பயிற்சியும் முழு உயிராற்றல் வளர்ச்சியும் தந்து அவ்வாற்றலைப் பெருக்கவும் பயன்படு கின்றது.

பழக்கப்பட்ட பாதையிலேயே கண்மூடியாக இயந்திரம் போலச் செல்லும் வாழ்வை இவ்விடர்கள் மீண்டும் அறிவுப் பாதையில் செலுத்துகின்றன. அதுமட்டுமன்று. பழக்கம் என்ற கடுஞ்சிறையில் அடைபட்டுச் செயற்படாமல், செயற்பட முடியாமல் கிடந்து வாடிய திறங்களை அவை குமுறியெழுந்து