பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

57

உடையது. உயிர் மலர்ச்சியின் ஒவ்வொரு படியின் இன்றி யமையாத் தேவையும் இடரைத் தூண்டுகிறது.

இடர்கள் இரண்டு வகையில் அறிவுக்கு, சிந்தனைக்கு, உள்ளுணர்வுக்குத் தூண்டுதல் தருகின்றன. இடர்கள் வந்தபின் அவற்றைக் கடப்பதற்குச் சிந்தனை தேவை. ஆனால் முன் னறிவுடையவர்க்கு இடர்கள் வந்தபின் அவற்றைக் கடப்பதற்குச் சிந்தனை தேவை. ஆனால் முன்னறிவுடையவர்க்கு இடர்கள் வராமல் தடுப்பதற்கே சிந்தனை தேவைப்படுகிறது. இடர்கள் தரும் படிப்பினைகளில் பின்னதே தொலை நோக்குடையது, நிலையான சிந்தனையை வளர்ப்பது அதுவே.

இடர்களுக்கு, சிக்கல்களுக்குக் காரணமான வாழ்க்கைப் பண்புகள் உண்டு. அவற்றை உணர்ந்தவர்களே தொலை நோக்குடனும் முன்கருதுதலுடனும் அவற்றை விலக்க முடியும் தொலைநோக்கிலும் முன் கருதலிலும் சற்றுக் குறைந்தவர் களுக்கும் இதே பாதையை அவ்வறிவினின்றும் விடுபட உதவுகிறது. இப்பாதையை எளிதில் காண ஒருவன் தன்னறிவே அவனுக்குத் துணையாக வேண்டும். இடர்களுக்குக் காரணம் புறச் சூழலிலில்லை, தன்னிடமே உள்ளது என்ற மெய்ம்மையே இத்தன்னறிவின் முதற்படி. ஏனெனில் தான் கட்டிய கட்டை ஒருவன் தானே அவிழ்க்க முடியும். இடர்கள் யாவும் தன் செயலால், தன் பிழையால் நேர்ந்தவை என்று கண்டவன்தான், அதைத் தன் செயலால் திருத்திக்கொள்ள முடியும்.

ர்கள் புறச்சூழலால் நேர்ந்தவையென்று கருதுபவன் என்றும் ‘ஊழ்வலி'யைக் குறை கூறிக் கொண்டு தலையிலடித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். தன் பிழை என்றும் கருதாமல், புறச்சூழலான இயற்கையின் செயலென்றும் கருதாமல், அது வாழ்வுடனும் இயற்கையுடனும் தொடர்பற்ற ஒரு சக்தியால், அத்தகைய ஒரு 'தேவன்', அல்லது ‘கடவுளி’ன் கட்டற்ற விருப்பால் நடைபெறுகிறது என்று கருதுவன் நிலை இன்னும் மோசமானது - கடவுட் பண்பை விடுத்துக் கடவுளை வேண்டிக் கொள்ளும் கீழ்த்தர மூட நம்பிக்கை நிலைக்கு அது மனிதனைத் தாழ்த்திவிடுகிறது. இது ஏறத்தாழ விலங்கு நிலைக்கு மிகவும் ஒப்பான நிலையேயாகும்.