பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

அப்பாத்துரையம் - 29

ஆள, தன்னுள்ளே தன் அகநோக்கைச் செலுத்தித் தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள, தன்னையே தான் ஊக்கி ஆற்றல் பெருக்கிக்கொள்ள, தளரா முயற்சியிலேயே வாழ்வைத் தட்டின்றி வளமார்ந்த பாதையில் இயங்கச் செய்யப் பழகிக் கொள்கிறான்.

ாழ்வின் மிகப்பெரும் பகைப்பண்புகள் கவலையும் நச்சரிப்புமே. இவை இடர்களை அகற்றுவதற்குப் பதிலாக, அவற்றை மிகைப்படுத்திக் காட்டி மனிதனை அவற்றைச் சுற்றியே ஓடத் தூண்டுகின்றன. அவற்றை வளர்க்கின்றன. புலியின் அச்சத் தால் புலிவாயில் சென்று விழுபவனைப் போல, தடுமாற்றக் கிலியால் தடுமாறி விழுபவன்போல, இடர் அச்ச மூலமே அவை இடர் பெருக்குகின்றன.

கவலைக்குப் பதில் அமைதி, நச்சரிப்புக்குப் பதில் சிந்தனை செயலாற்றுவதே சால்பு.

அடைந்துவிட்ட இடரிலிருந்து அகல, சிக்கிக்கொண்ட சிக்கலிலிருந்து விடுபட உதவும் பண்புகள் இவையே.

கவலையும் நச்சரிப்பும் கவலை பற்றிய சிந்தனைகளே. கவலையற்றவன், நச்சரிப்பற்றவன் அதே சிந்தனைகளை இடரின் காரணம், சிக்கல் வந்தவகை பற்றிச் சிந்திக்க விடுகிறான். பின்பற்றிய தவறான பாதையில் திரும்பிச் சென்று எங்கே தவறு தொடங்கிற்றென்று காணவும், சிக்குற்ற இடத்தில் சிக்கல் எவ்வாறு நிகழ்ந்ததென்று கண்டு அதனைச் சிக்கியபடியே விடுவிக்கவும் இஃது அவனுக்கு உதவுகிறது.

விழிப்புணர்வு: ஓர் அறிவியல் சிந்தாமணி

சிக்கலிலிருந்து விடுபட உதவிய அறிவே, அடுத்தபடியிலும் முன்னேற அவனுக்கு உதவுகிறது. - அதுவே விழிப்புடைமை. சிக்கலின் திசையிலிருந்து, இடரின் நெறியிலிருந்து அவன் விழிப்புடன் விலகிப் புதுநெறி செல்கிறான்.

சிந்தனையின்மை அல்லது தவறான சிந்தனையே தன்னைத் தவறான நெறியில் தூண்டிற்றென்று அறிவுடையவன் காண் கிறான். அது சிந்தனை நெறியிலும் ஒரு படிப்பினையாகிறது. அவன் சிந்தனை ஆற்றல் பெருகுகிறது - சரியான சிந்தனை, தவறான சிந்தனையறிந்து அவன் சிந்தனைக்கே நெறி