பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

இருவகைக் கவலா நிலைகள்: பெருமடமை, அறிதுயில்நிலை

65

கவலை முற்போக்குக்கு, வளர்ச்சிக்குத் தடை என்று மேலே கூறினோம். ஆனால் அஃது எல்லையற்ற பிற்போக்குக்கும் தடையேயாகும். ஏனெனில் கவலையுடையவன் என்றும் எப்போதும் கவலையுடையவனாய் இருக்க முடியாது. கவலை பெருக்கும் இடர்களே இறுதியில் மனிதனைக் கவலையினின்றும் இடரினின்றும் விடுவிக்கத் தூண்டிவிடும். கவலையின் இந்த இருதிசைச் செயலைக் கவலையற்ற நிலையின் இரு தளங்கள் மெய்ப்பிக்கின்றன.

அறிவின் எல்லை கடந்த மெய்யுணர்வுப் படியிலும் மனிதன் கவலையற்றவனாக வாழ்கிறான். இது கவலையற்ற முழு வளர்ச்சிப்படி. ஆனால் அறிவற்ற நிலையில், விலங்கு நிலை யினும் கீழ்ப்பட்ட மடமைப்பிடியிலும் கவலையற்றநிலை உண்டு. இது தன்னலம் பற்றிக்கூடச் சிந்திக்காத மடமைத் தன்னலநிலை, இருளார்ந்த, சிந்தனை நிழலற்ற அறியாமைப்படி இப்படியி லுள்ளவன் எது கொண்டு வயிறு நிரப்பி, நேற்றும் இன்றும் நாளையும் எண்ணாது வாழும் பன்றி போல்பவன் ஆகிறான். அவன் உள்ளத்தில் ஐயங்கள் கிடையா; கேள்விகள் எழுவ தில்லை. இன்பத்தில் அவன் மிதந்து செல்கிறான், இன்பத்தைப் பற்றிக் கூடச் சிந்திப்பதில்லை. துன்பத்தில் அவன் துவள்கிறான் - துன்பத்தைப் பற்றியோ, துன்ப நீக்கத்தைப் பற்றியோகூட அவன் கருதுவதில்லை.

மடமையின் கவலையற்ற நிலைக்கு நேர்மாறானது மெய் யுணர்வின் கவலையற்ற நிலை. முன்னது விழிப்பற்ற ஓயாத்துயில் நிலையானால், இது துயிலற்ற ஓயா விழிப்புநிலை அல்லது அறிதுயில் நிலையாகும். அஃது அறிவற்ற அமைதியன்று, அறிவு டையறாது உள்நின்று உயிர்க்கும் அமைதி ஆகும்.

இந்நிலையடைந்தவன் திரும்ப என்றும் சிந்தனையற்ற அமைதியாகிய மடமை நிலையையும் அடைவதில்லை. டையிடையே சிந்தனை தூண்டப்பெற்று, இடையிடையே அதன் பயனாக துயில்நிலையறிவு இயங்கப்பெறும் வெற்று அறிவு