பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

67

தொடங்குகிறான். அவன் உயிர் மெய்யுணர்வின் உடற்கூறாக, மெய்யுணர்வு கடவுளின் உடற்கூறாக இடையறா ஒளிபெற்று இயங்கும்.

மெய்யுணர்வுநிலை பெற்றவனே வாழ்பவருள் வாழ்பவன், வாழ்வின் உச்ச உயர்கனவின்பம் எய்துபவன். ஏனெனில் அந் நிலையிலேயே எல்லையிலா வாய்மையின் பேரொளி இனிய நிலவொளியாய் எங்கும் இடையறா இன்பம் வழங்குகிறது. ஐயங்கள், இடர்கள் அவன் வாழ்வில் இல்லாமலில்லை. ஆனால் அவை அவனுக்குக் கற்பாறைகளாகத் தோற்றுவதில்லை. வெண்ணிலவொளியில் பொன்னொளி பெற்றுத் திகழும் மென்முகிற் படலங்களாகவே ஒளி வீசுகின்றன. ஏனெனில் அவை அவன் தன்னலம் பற்றிய, தனி வாழ்வு பற்றிய ஐயங்கள், சிக்கல்கள் அல்ல; உலகப் பொது வாழ்வு பற்றியன. அவற்றின் விளக்கம் அவன் மெய்யுணர்வொளி விளக்கத்துக்கு மேன்

மேலும் எழிலூட்டுகின்றன.

பகலொளியான வாய்மையை அவையே அவனுக்கு இன்னில வொளியாக்கி விடுகின்றன. அஃது இருளையகற்றி ஒளி தருவதுடன் நிற்கவில்லை. பகலொளிபோல இருள் தொடர்பையே அகற்றிவிடாமல் அஃது உலகின் துயர்களுடன் தொடர்பு கொண்டு, உலகின் ஐயங்கள் இடர்களைத் தன் மீது படரும் முகிலாக் கொண்டு, உலக நலத்திலே தன் நலமும் இன்பமும் காண்கிறது.

நெடுநேரம் தொல்லை தந்த பாடத்தைக் கற்று விளங்கிக் கொண்ட பள்ளிச் சிறுவர்போல, உலகின் தனிநல வாழ்வின் துயர்கள் கடந்து பொதுநல வாழ்வின் துயர்களடைந்த மெய் யுணர்வாளன் இன்னல அமைதியுறுகிறான். சிறுவர் படிக்க வேண்டிய பாடங்கள் இன்னும் உண்டு. ஆனால் முதல்பாட வெற்றி மற்றப் பாடங்களின் வெற்றிக்கு ஒரு முன்னறிகுறி, நம்பிக்கைக் குறி ஆகிறது. அது போல, மெய்யுணர்வு வாழ்விலும் இடர்கள், இன்னல்கள், சிக்கல்கள் உண்டு. ஆனால் மெய் யுணர்வாளன் அவற்றை முன் கருதலுடன் பல சமயம் அகற்றி விடுகிறவன் மட்டுமல்ல. அவை அவன் செயல்மீறி வந்தபோதும் அதனை உலகநலம் கருதி எதிரேற்று, அதனுடன் போராடு