பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

அப்பாத்துரையம் - 29

வதிலேயே சிலம்பக்காரன் சிலம்ப ஆட்டத்திலடையும் மகிழ்ச்சி பெறுகிறான். தனி வாழ்வின் பொருளற்ற இன்பமோ, இரு ளார்ந்த துயரோ, அவனை நாடுவதில்லை.

ரு

இடர்கள் இன்னல்களின் பெயர்களைக் கொண்டு அவற்றைத் தீங்குகள், பொல்லாங்குகளின் முன்னோடிகள் என்று கருதிவிடாதே. அவற்றை அவ்வாறாக்குவது அந்த எண்ணமே அவற்றை நலங்கள், இன்னல்களின் முன்னோடிகள் என்றே கருதுக. உண்மை நிலையும் இதுவே. இவ்விடர்கள், பொல்லாங்கு களை விட்டகலவோ, அவற்றைத் தட்டிக் கழிக்கவோ, அவற்றி னின்றும் ஒதுங்கவோ, பதுங்கவோ எண்ணாதே. ஏனெனில் நீ எண்ணினாலும் அது முடியாத செயலாகும். அவை உன் பண்புகளின், செயல்களின், தவறுகளின் பயன்கள் உன்னை அவை நிழல்போலத் தொடராமல் விடமாட்டா. அவற்றை விலக்கும் ஒரே வழி அவற்றைப் பயன்படுத்துவதே - அமைதி யுடன் எதிர்த்து நின்று போராடி வென்று, அவ்வெற்றியின் வீறு நலம் பேணுவதே!

-

அவற்றின் மீது உன் முழு ஆற்றலையும் முழு அறிவொளி யையும் செலுத்து. அவற்றுக்குத் தலை குனியாமல் உன் முழு வீறுடன் நிமிர்ந்து நின்று போராடு. அவற்றை ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தால் கூறுபடுத்தி, வகைப்படுத்தி, காரணகாரியத் தொடர்புபடுத்திக் கண்டபின், நீ அவற்றை வென்றுவிடுவது எளிது. அதுமட்டுமல்ல. வென்றபின் அவற்றையே நண்பனாகக் கொண்டு, நீ உன் வெற்றியின் பயனை இரட்டிப்பாக்கலாம். ஓரிடர் நீத்தவன் வெற்றிப் பயன் அடுத்த இடரை அவன் தாக்கும் சமயம் அவனுக்கு இரட்டிப்பாற்றலை உண்டு பண்ணுகிறது.

ஆற்றலும் அறிவும் பெற்று மெய்யுணர்வின்பம் பெறும் துணைவழிகளில் இஃது ஒன்று. பேரின்பப் பெருவழி அருகே அஃது உன்னைக் கொண்டு சேர்ப்பது உறுதி.

அடிக்குறிப்புகள்

1.

"Man who man would be

Must rule the empire of himself; in it