பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

73

சுமக்கின்றனர். வேண்டா வெறுப்பாகச் சுமந்து சென்று, அதுபற்றி நொந்து, நொந்து அலமருகின்றனர். அப்படியும் சுமைநீக்க எண்ணுவதில்லை.

அறிவுக்கொவ்வாத புதிர் இது!

ஒரு செயல் இன்றியமையாச் செயலானால், அதை அழுது கொண்டு செய்வானேன்? ஒரு செயல் இடையறா முடிவற்ற செயலானால், அதை உள்ளூரக் கதறிக்கொண்டே செய்வா னேன்? அதையே சிரித்துக்கொண்டு, பாடியாடிக் கொண்டு செய்வதல்லவா அறிவுடைமை? அஃது உண்மையில் துன்ப முடைய செயலானால்கூட, இதுவல்லவா துன்பம் குறைக்கும், இன்பம் எளிதாக்கும் செயல்?

இங்கும் அறிவுக்கொவ்வாத மடமையே காணப்படுகிறது! மடமையுள் மடமை

இன்றியமையாமையை ஒரு நண்பனாக, வழிகாட்டியாகக் கொள்வதே நேர்மை, பயனுடையது, அறிவுடையது. அதை ஒரு பகைவனாகக் கருதிச் சீறுவது மடமையுள் மடமை ஆகும். வாழ்க்கையில் இன்றியமையாத் திறங்கள் ஒவ்வொரு திருப்பத் திலும் நம் கண்முன் தென்படுகின்றன. பசி, விடாய், பிணி, சாக்காடு, முதுமை இவை யாவும் விலக்க முடியாதவை, இன்றியமையாதவைகளே. அவற்றை நாம் பகைப் பண்பாகச் சாடி வீண்துயர் எய்துவதில்லை, ஓயாத் துயர் அடைந்தாலும் தற்காலிகத் துயராகவே கொண்டு அவற்றை ஏற்றே வாழ் கிறோம்.

-

மனித இனம் நாளடைவில் பசியையும் விடாயையும் இயல் பாகக் கொண்டதுடன் நிற்கவில்லை. நண்பனாக, வழிகாட்டி யாகக் கொண்டே வாழ்கிறது, பயனடைகிறது. அவற்றை உணவு குடிக்குரிய தூண்டுதலாக்கி, உணவிலும் குடியிலும் பயனும் இன்பமும் காண்கிறது. சாவிலும் முதுமையிலும் இதுபோலவே தான் மனித இனம் மாளாத்துயர் காணவில்லை; புதுப் பிறப்பைப் பேணும் இன்பம் காண்கிறது. மற்றும் இதுபோன்றே பிணியை மனிதர் உடல்நலம் பேணுவதற்கான தூண்டுதலாக்கு கின்றனர்.