பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

மண்ணார்ந்த முள்முடி பொன்முடியாக் கொண்டு விண்ணார் ஒளியில் மிளிர்ந்து.

வாழ்க்கை ஓர் ஒப்பந்தம்

-

75

வாழ்க்கையின் அடிப்படை, அதன் எலும்புக் கூடு பல இன்றியமையாக் கட்டாயச் செய்திகளின் கோவையே. வாழ விரும்புபவன், வாழ்பவன் அவற்றுடன் ஓர் ஒப்பந்தம் செய்தாக வேண்டும்! இன்றியமையாச் செய்திகளின் கோவையை ஏற்பது ஒப்பந்தத்தின் ஒரு பகுதி; அஃது ஏற்பவன் விருப்பத் தேர்வுக்குரிய பகுதியன்று, கட்டாய ஏற்புக்குரிய பகுதியே. ஆனால் இதற்கு நேர்மாறாக, ஒப்பந்தத்தின் மறுபகுதி முற்றிலும் விருப்பத் தேர்வுக்குரிய பகுதி. ஏற்பதை விரும்பி ஏற்று மகிழலாம், வெறுத்து ஏற்றுத் துன்புறலாம். வேண்டா வெறுப்புடன் ஏற்றுத் தொல்லை களைப் பெருக்கிக் கொள்ளலாம், வேண்டி விரும்பி மேற் கொண்டு விண்ணாரமுதம் பெறலாம். அறிவுடையவன் செயலுக்குரிய பகுதி இவ்விருப்பத் தேர்வுக்குரிய பகுதியே.

வாழ்க்கையில் துன்பத்தை வரவழைத்துக்கொள்ள விரும்பாதவன், அதைச் சுமையாக்கிக்கொள்ள எண்ணாதவன், ன்பமாக்க விரும்புபவன் இன்றியமையாச் செய்திகளின் கோவையை அப்படியே ஏற்றமைவான். அவை மாபெரும் சுமையாகக் காணப்பட்டால்கூட, அவற்றை அவ்வாறு கருதாமல், சுமையற்றவன் நடப்பதுபோல அவற்றை மறந்து நடப்பான். அவை முள் முடிகளாகத் தோற்றினால்கூட, அவற்றை அவ்வாறு கருதாமல், ஒரு மணி முடியை மகிழ்வுடனும் வீறுடனும் சூடிச் செல்பவன்போல அவற்றை மேற்கொண்டு செல்வான்.

ஒரு பொருள், அஃதாவது ஒரு கடமை, ஒரு தோழமை, அல்லது ஒரு சமுதாயக் கடப்பாடு உனக்கு மிகவும் வெறுப் பூட்டுவதாக அமைகிறது என்று வைத்துக்கொள். அதை நீ ஒரு அலமரல் உறுகின்றாய்!

அகத்தின் பண்பு காட்டும் பளிங்கே புறம், புற உலகு!

உலகின் புறப்பொருள்கள் தனிப்பொருள்களுமல்ல, உன்னுடன் தொடர்பற்ற பொருள்களும் அல்ல. அவை ஒவ்வொன்றும் உன் அகத்தின் ஒரு கூறினை நிழலிட்டுக் காட்டும்