பக்கம்:அப்பாத்துரையம் 29.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பேரின்பச் சோலை

79

கொணரவே விரைகிறது. அம்முயற்சியைத் தடுக்கும் மனிதனுக்கும் அஃது உண்மையில் துன்பம் தர எண்ணவில்லை. ஆனால் சமநிலை நோக்கி விரையும் இயற்கையின் செயலைத் துன்பமாகக் கொண்டு, துன்ப காரணமான தன்னலத்தை விடாததன் மூலம் தன்னலவாணன் தானே இயற்கையமைதி மீறித் தன் துன்பத்தைப் பெருக்கிக்கொள்கிறான். அகத்தே நிகழும் இம்மடமைத் துன்பமன்றி, உலகில் உண்மைத் துன்பம் எதுவும் கிடையாது. துன்பமென்று கூறப்படும் நிகழ்ச்சிகளெல்லாம் உண்மையில் நலம்பேணும் ஆற்றற் கூறுகளே, மெய்யறிவை மனிதனுக்குச் சுட்டிக் காட்டும் இயற்கையின் தூதுரைகளே யாகும்.

நோவென்பது என்ன? துயர் தருவது எது?

வீண்சுமை என்பது யாது?

நோவென்பது கொந்தளிக்கும் உணர்ச்சியேயன்றி வேறன்று. துயர் தருவது மடமையே. வீண்சுமையாவது தன்னலம் மட்டுமே. இம்மூன்றும் தவிர்த்தவன் துன்பமற்றவன், இன்பமுற்றவன்.

4"இருளார்ந்த தன்னலம்

என்னும் கொடுந்தெய்வம் அருளார்ந்த எண்ணம்

செயல்க ளெலாம் மருளாக்கித்

தெருளாத மக்களையே

தேம்பியழ, ஏங்கி நிற்க

பொருளற்ற துயராரப்

புன்கண ராக்கிடுமே.'

துன்ப நீக்கம், சுமை ஒழிப்பு

வெறியுணர்ச்சிகளையும்

மடமையையும் குறுகிய

தன்னலத்தையும் உன்னுள்ளத்திலிருந்து தவிர்த்துவிட்டால், உன் வாழ்விலிருந்து துன்பம் அகன்றுவிடும். சுமை வீழ்ந்துவிடும். அகத்தில் தற்பற்று இருந்த இடத்திலே அன்புக்கு, தூய பொதுநல அன்புக்கு இடங்கொடுத்து விட்டால், இன்ப ஒளி தானாக உன்