பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

அப்பாத்துரையம் - 30

உரிமையுடன் வந்திருக்கிறேன்" என்று அவன் பேச்சுத் தொடங்கினான்.

"தங்கள் அன்பாதரவுக்கு நன்றி. என் இன்னுயிர்த் தமக்கை யிடம் தாங்கள் காட்டும் பரிவுகண்டு மகிழ்கிறேன்!” என்றாள் லாரைன்.

தறுவாய்க்கேற்ற முறையில் நயமாகவும் அதே சமயம் புறஉணர்ச்சிப் போர்வையைச் சுட்டியும் அவன் பேசியதைக் கேட்டு அவள் சிறிது நேரம் திகைத்து நின்றாள். ஏனெனில், அவன் உண்மையில் லீமாவின் பிரிவுத்துயர் உசாவ வரவில்லை. அந்தச் சாக்கில் தன் திருமண விலங்கை லீமாவின் தங்கையிடம் மாற்றிப் போகவே திட்டமிட்டு வந்தான். முதற் பேச்சின் அதிர்ச்சி யிலிருந்து தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்டு அவன் தன் பேச்சுப் பாணியை மாற்றி, நேரடியாகத் தன் கருத்தைப் புலப்படுத்தத் தொடங்கினான்.

"மாண்டவர்க்காக எவ்வளவு நாம் வருந்தினாலும் அவர்கள் மீண்டும் வருவதில்லை என்பதை நீங்கள் அறியலாம், அம்மணி. தவிர இச்சிறு துயரால் நீங்கள் உங்கள் அழகிய பொன்னுடைலை வருத்திக் கொள்ளவும் கூடாது. உங்கள் அழகு, குணம், இளமை...

லாரைன் அவன் பேச்சுப் போக்கைக் கண்டு திடுக்கிட்டாள். அவள் அவன் பேச்சை வாளா கேட்டுக் கொண்டிருக்காமல் சினங்கொண்டு எழுந்தாள்.

அக்காலப் பகட்டாரவார வாழ்வில் பொறுப்பற்ற விடலை ஆடவர் தம்முடன் தம் நாயையோ அல்லது வேறு வளர்ப்பு விலங்குகளையோ இட்டுச் செல்வதுண்டு. லீமாவை மணம் புரிய எண்ணிய இவ்விடலை தன்னுடன் ஒரு குரங்கையே உடன் கொண்டு சென்று வருவது வழக்கம். லாரைன் எழுந்த வேகத்தில் குரங்கு சலசலவென்று பற்கடித்துக் கொண்டு அப்பால் ஓடியது. விடலை அதைப் பிடித்திழுத்துத் தடவிக் கொடுத்துக்கொண்டே, “அம்மணி! என் நெஞ்சத்தைத் தங்கள் வசத்தில் ஒப்புவிக்க உங்கள் தந்தையிடமிருந்து உரிமை பெற்றே வந்திருக்கிறேன்” என்றான்.

அவன் துணிச்சல் லாரைனுக்குச் சினமூட்டியது. அதே சமயம் இத்தகைய ஈனர்களுக்குத் தந்தை ஒரு சிறிதும் மனிதப்