பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

35

பாசமின்றித் தம் பெண்களை ஒப்படைக்க நினைப்பது பற்றி அவள் மனங் கசந்தது.

அவள் இப்போது நயமாகவே பேசினாள். ஆனால், தன் முழு வெறுப்பையும் சீற்றத்தையும் அவன் மீது கொட்டினாள்.

“தாங்கள் தன்னைக் காதலித்தாகத்தான் அப்பாவி லீமா நம்பியிருக்கக்கூடும். ஆனால், லீமாவைத் தாங்கள் காதலித்த வகையை நான் இதோ பார்க்கிறேனே! தங்கள் காதலை லீமா நம்பியிருக்கக் கூடும். நல்லகாலம், அவள் அக்குழியில் விழாமல் உயிர் விட்டாவது தப்பினாள். அவள் செல்வமும் என்னிடமே வர இருப்பதால், நீங்களும் காதலித்த செல்வத்தைப் பின்பற்றி இப்பக்கம் நாடினீர்கள். பாவம்! தாங்களாவது செல்வத்துக்காக காதலிப்பதாக நடிக்க முடிந்தது. நான் எதற்காக நடிப்ப

என்றாள்.

து?'

அவன் வாயடைத்துப் போயிற்று. பேச்சில் வெல்ல முடியாதென்று அவளை அச்சுறுத்தி அடக்க எண்ணிக் காலை ஓரடி முன் வைத்தான். லாரைன் பெண் புலி போலச் சீறி எழுந்தாள். தன் கைப்புறச் சட்டையை ஒதுக்கி அதிலுள்ள ஒரு படுதழும்பைச் சுட்டிக் காட்டி, "இதோ பார்; நீ ஆள் தெரியாமல் விளையாட வேண்டாம். என் லீமாவை ஒரு பெண் அடிக்க வந்தாள். அவள் மிக முரட்டுப் பெண். அவளை நான் தடுத்த போது அவள் கடித்த தடம் இது. அவள் கடித்த பல்லின் திறத்தைத் தன்னால் ஆனமட்டும் காட்டினாள்.நான் தலையைப் பிடித்த பிடிவிடாமல் இழுத்து என் கைத்திறத்தைக் காட்டி வென்றேன். அவள் பல் தழும்பு என் கையில் அழியாது.அதனைப் போலவே என் கைத் தழும்பும் அவள் வழுக்கைத் தலையில் என்றும் தெரியும். இப்போது கண்டு கொண்டாயா நான் எப்படிப்பட்டவள் என்பதை?” என்றாள்.

அவன் ‘ஆ!' என்று கூறிப் பின்னடைந்தான்.

அவன் குரங்குகூட லாரைன் சீற்றங்கொண்டு அஞ்சி அவனை இழுத்துக் கொண்டு ஓடிற்று.

அவன் பேரில் விடலை கொண்ட அச்சம் அவனை மீண்டும் லாரைன் பக்கம் வராமல் தடுத்தது. ஆனால், உரிமை பெற்ற காதலனென்ற முறையில், லாரைனுடைய தந்தையிடமிருந்து