பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

||-

அப்பாத்துரையம் - 30

அவர் செல்வத்தை அவன் கறப்பதை இது தடுக்கவில்லை. லாரைன் துடுக்குத் தனத்தை மாது பெரோனிடம் அவன் ஒன்றிரண்டு ஆகப் பெருக்கி கூறி, அவள் ஒத்துழைப்புடன் முன்னிலும் விரைவாக அவள் செல்வத்தைக் கரைத்து அவள்மீது பழி தீர்ப்பதென்று அவன் கச்சை கட்டினான். நாளாக ஆக, லாரைனின் செல்வம் அத் தீயோன் தீய வாழ்வுக்கு இரையாகலாயிற்று.

மாது பிளான்ஸி இப்போது லாரைன் பக்கமிருந்து திருமண வகையில் வற்புறுத்தினாள். "மாது பெரோன் ஒரு புறம், இவ்விடலை ஒரு புறம் உன் செல்வத்தை இரண்டருகிலிருந்தும் தின்று கொண்டிருக்கிறார்கள். இன்னும் திருமண வகையில் காலந்தாழ்த்தினால் விரைவில் ஓட்டாண்டியாய் விடுவாய்” என்று அவள் லாரைனை முடுக்கினாள்.

லாரைனும் யாரையாவது விரைவில் மணஞ்செய்து கொள்வது என்றுதான் துடித்தாள். ஆனால், இது செல்வங் கரையு மென்ற அச்சத்தினால் என்பதற்காகத்தான். ஆனால், அன்புக்கு அலைந்த அவள் வாழ்வில் அவளுக்கு ஓயாக் கவலையே மிகுதியாயிருந்தது. அக்கவலையிலேயே தோய்ந்த அவள் உள்ளத்தில் காதல் என்ற பேரழகு எவரையும் கவர்ந்தது. ஆனால், எவரும் அவளைக் கவரவில்லை.

இளமை, நற்குணம் உடையவராய், நட்புக்கு உரியவராக லாரைன்தேர்ந்தெடுத்த எந்த இளைஞரையும் பாட்டியோ மாற்றாந்தாயோ விரும்புவதாகக் காணவில்லை. அவர்கள் உள்ளத்தில் லாரைனது காதலுக்குரியவன் இளைஞனாயிருக்கக் கூடாது என்ற எண்ணம் இருந்தது போல் காணப்பட்டது.நடுத்தர வயதுடையவரைத் தேர்ந்தெடுத்துப் பார்த்தாள். இத்தகை யோரைப் பாட்டி ஆதரித்தால், மாற்றாந்தாயும் அவளைப் பின்பற்றித் தந்தையும் தடுத்தனர். மாற்றாந் தாயும் தந்தையும் ஆதரித்தால், பாட்டி உடனே எதிர்த்தாள். லாரைன் திருமணப் பேச்சு இங்ஙனம் அவர்கள் இருவர் போட்டிக்குரிய ஒரு போராட்டமாயிருந்தது. இவ்வகையில் தனக்குத் திருமணம் என்பது அவர்கள் உயிருடனிருக்கும் வரை முடியாத காரியமேயாகும் என்று அவன் தனக்குள் எண்ணலானாள்.