பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

39

வரைதான் மதிப்புத் தருகிறது - அல்லது அதனை ஒருவரிடம் நம்பி ஒப்படைப்பதுவரைதான் மதிப்பு உண்டு என்று அவள் கண்டாள். ஆகவே, அவள் கனவுக் கோட்டைகளிலீடுபடாமல், ஆய்ந்தமைந்து தன் எதிர்கால வாழ்க்கை பற்றித் திட்டமிடுவதில் கருத்துச் செலுத்தினாள்.

த்தனைக்குமிடையில் அவளிடம் அவளறியாமலே ஒரு குறைபாடு இருந்து வந்தது - அவள் உள்ளம் காதலை அறியவில்லை காதலை அவாவவும் இல்லை. அவள் அலந்தது காதலுக்கல்ல; அன்புக்கு, நட்புக்கு! உள்ளந்திறந்து அன்பு செலுத்த, அன்பு கோர ஒரு தாய்; அன்போ அறிவுரையோ அளிக்க ஒரு தந்தை; துன்பம் பகிர்ந்து, இன்பம் பெருக்கி ஊடாட ஓர் உயிர் நண்பன்; இவர்களே அல்லது இவர்களின் ஒரு வட்டுக் கலவையே இப்போதைய அவள் தேவை.

அவள் தன் விருப்பங்களை ஆராய்ந்தாள்; தன் சூழல்களை ஆராய்ந்தாள். ஆம்; தன் எதிர்கால வாழ்வின் தேவை ஒரு கணவன் அவன் வெறுங்காதலனாய் இருந்து பயனில்லை; தந்தையற்ற அவளுக்கு ஒரு தந்தையாய், தாய் அற்ற அவளுக்கு ஒரு தாயாக இல்லாவிடினும், அவன் அவள் தாய்மையன்புக்குரியவனாய், அவள் மதிப்பார்வத்துக்கும் அவா ஆர்வத்துக்கும் உரிய பண்பாளனாய் இருக்க வேண்டும். இப்பண்புக் கூட்டுக்குமுன் இளமை, அழகு, பகட்டான காதல் பசப்பு ஆகிய எவையும் புறக்கணிக்கத்தக்கவை என்று அவள் உள்ளம் கூறியது.

அவள் மனத்திரை முன் இப்பண்புகள் அவளுக்குப் பழக்கமான ஒரு முது நண்பர் உருவில் காட்சியளித்தன. அந்நண்பரே அவள் தந்தையின் இல்லத்திற்கு அடிக்கடி விருந்தினராக வந்து கொண்டிருந்த கோமான் எல்ஃஜீயர் ஜோஸப் சிட்னி சிராம்மோன் என்ற பகட்டான பெயர் தாங்கியவர். அவர் உண்மையில் எழுபது வயதுடையவர்; ஆனால், அவர் வீர வாழ்வு வாழ்ந்தவராதலால், உடற்பட் டுடையவராய் ஐம்பதென மதிக்கத் தகுந்த தோற்றமுடைய வராயிருந்தார். அவர் இளைஞரினும் விரைந்த சுறுசுறுப்பான நடையுடையவர்; அத்துடன் நெட்டையாகவும் பார்ப்பதற்குப் பெருமிதத் தோற்றமுடையவராகவும் இருந்தார். அறிவமைதியும், அதனிடையே பண்பான்மையின் சின்னமாக கனிவும்