பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

அப்பாத்துரையம் - 30

ஆயினும் அவர் முற்றிலும் அறிவமைதியை இழந்து விடவில்லை. “என் அருமை காண்டர்! நீங்கள் விளையாட்டுக்குத் தான் கூறுகிறீர்கள் போலிருக்கிறது. தங்கள் மருகியாவது, என்னை இங்ஙனம் கருதுவதாவது! அவள் அழகென்ன, இளமையென்ன? அவள் நாகரிகத்துக்கும் குணத்துக்கும் அவளைத் தலைமேற் கொள்ள எத்தனை இளைஞர்களும் இளங்கோக்களும் காத்துக் கிடக்கின்றனர். அவள் என்னைப் புகழ்ந்து பாராட்டுவதற்காக இதைக் கூறியிருக்கக் கூடும். அதற்கு நான் தகுதியுடைய வனல்லவே."

அவர் சொற்கள் அவர் உள்ளார்ந்த உணர்ச்சியை மறைக்க வில்லை. காண்டருக்கு வேறு சொற்கள் தேவைப்படவுமில்லை. அவர் அமைதியாக, "விளையாட்டல்ல, கோமான்! தாங்கள் இதனை ஏற்றுக் கொண்டதாக லாரைனிடம் கூறப் போகிறேன்” என்றார்.

லாரைனின் மகிழ்ச்சிக்கும் எல்லையில்லை. அத்துடன் அவள் வகையில் இதுவரை ஒத்துவராத இரு கட்சிகளும் இதில் விளக்கத்தக்க அளவு ஒற்றுமை காட்டினர். சிட்னி சிரோம்மோன் இளைஞராகவோ நடுத்தர வயதினராகவோ கூட இல்லாமல், முதியவராகவும் மிக மிக உயர்குடி மதிப்புடையவராகவும் இருந்ததால், மாது பிளான்ஸி ஒரு புறமும், மாது பெரோனும் திரு. பெரோனும் மறுபுறமும் இத் திட்டத்தை, அட்டியின்றி ஏற்றார்கள்.

மணநாள் குறிக்கப்பட்டது.

மணவிழாவுக்காக யார் யாருக்கு அழைப்பிதழ் அனுப்புவது என்பதற்கான விருந்தழைப்புப் பட்டியல் வகுக்கப்பட்டது.

"திரு. திருமதி

அவர்களுக்கு,

திருநிறை செல்வக் கோமான் எல்ஃஜீயர் ஜோஸப் சிட்னி சிரோம்மோனுக்கும் திருநிறைச் செல்வி லாரைன் தேழீன் பெரோனுக்கும், நிகழும் 1769 ஏப்ரல் மாதம் 12ஆம் நாளன்று காலை 11- 11 மணிக்குப் பாரிஸ் நகரக் கோயிலில் வைத்து நடைபெறும் திருமண நிறைவு விழாவுக்குத் தாங்கள் தங்கள்