பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

43

அன்பரும் சுற்றமும் சூழ அன்பு வருகை தந்து எங்களைச் சிறப்பிக்கும்படி கோருகிறோம்.

இங்ஙனம் தங்களன்புள்ள,

திரு.பெரோன்

மாது பிளான்ஸி

பெண் ஓர் அழகரசி. மாப்பிள்ளை ஒரு புகழரசர், துணையிணைப்பு எதிர்பாராதது. எனவே, எங்கும் பரபரப்பும் வியப்பார்வமும் பரந்தன.மண அழைப்பிதழ்கள் எங்கும் நடமாடின.

மணமகள் உடையில் அவள் கலைச்சுவையுடன் அவள் செல்வ மரபுபோட்டியிட்டது.இரண்டும் சரிசமமாகவே இணைந்தன. அவள் விரும்பிய வெண்மை நிறம் வென்றது - ஆனால் வெண்மை வெள்ளிச் சரிகைகளாகவும் வெண்பட்டுகளாகவும் மிளிர்ந்தது. பொன்னணி மணிகளின் ஒளிகளைக் கவிந்து வைரங்களின் வெள்ளொளி சுடர் விட்டது. இளஞ் சிவப்புநிற அருகுகளும் வானீலக் கச்சைகளும் இவ்வெண்மைகளை எடுத்துக் காட்டின. முகத்திலும் உடலிலும் படர்ந்த நறுமண வெண்தூளிடையே மங்கிய சிவப்பொளி கலந்துறவாடி இளநகை பூத்தன.

முதுமையின் அமைதி, ளமையின் எக்களிப்பு மணமகனிடம்; இளமையின் எழில் அறிவின் அமைதி மணமகளிடம்; மனம் நிறைந்த இன்பக் களிப்பு அனைவரிடமும்- இத்தகைய நிறை அமைதி பெற்று விளங்கியது மணவிழா. லாரைன் கோமான் சிராம்மோனின் மனைத் தலைமையை உரிமையுடன் ஏற்று கோமாட்டிசிராம்மோன் ஆனாள்.

மணப்பெண் மணவாழ்வின் உறுதி வாசகத்தை முறைப்படி கூறுகையில், அவள் உள்ளம் அமைதி பெற்றிருந்தது. அவள் குழந்தைக் கால வாழ்வின் இருண்ட நினைவுகள், கன்னிமைக் காலப் புயல்கள் யாவும் ஓய்வு பெற்றேகின.