பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. மன்னவை யேற்றம்

பாரிஸ் நகரில் வேர்சேப்பாக்கத்தில் ஒரு பெரிய மாளிகை. அதுவழக்கமாகத் திறக்கப்படாமலே இருந்து வந்தது. இன்று அது திறக்கப்பட்டு அங்கே உயர்குடி மக்கள் அணியணியாகச் சென்று குழுமிக் கொண்டிருந்தனர். இறையிட்டுத் தூசி படிந்து கிடந்த சாய்விருக்கை, மேடைப் பலகைகள் யாவும் நெய்யிட்டுத் துடைத்துப் பளபள வென்று மின்னின. வில் வைத்தமைத்து அவற்றின் மீது மென் பட்டு மெத்தைகளிடப்பட்ட அவ்விருக்கைகளில் ஒய்யாரமாக அமர்ந்து மாதரும் இளமங்கையரும் அழகிய சிறு விசிறிகளால் அடிக்கடி சிறு வீச்சு வீசிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் இளைஞரும் நல்லாடவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஆடையேந்தியும் மேலங்கியின் நீண்ட பின்தானைத் தொங்கலை ஏந்தியும் பணியாட்களும் பணிப்பைதல்களும் தத்தம் பணியில் கருத்துச் செலுத்தி நின்றனர். வர்களனைவரும் அம்மாளிகை முழுதும் பரந்து மலரை மொய்த்த பூவண்டு, பொறி வண்டுகள் போல் மொய்த்திருந்தனர். தெருக்களில் அடர்த்தியாக நின்றும் நடந்தும் திரிந்த மக்கள் திரள்களை மேலிருந்து பார்ப்பவருக்கு, அவர்கள் தலையணியும் அதிலுள்ள தீப்பறவை இறகுகளும் தவிர வேறு எதுவும் தெரியமாட்டாது. ஆளேயில்லாமல் நீரில் மிதந்து இறகுக் கடைகள் சென்றன என்று கூறத்தக்கதாயிருந்தது அக்காட்சி. இவ்விறகுக் கடலிடையே மீன் பிடிக்கும் படகுகள் போலக் குதிரைகளும் குதிரை ஊர்திகளும் அங்காங்கு மெல்லென மெல்லென அசைந்து சென்றன.

இவர்

இம்மாளிகையே மன்னர் சிறப்பிருக்கைக்குரிய “காலரி தேகிளாஸே" என்ற அரண்மனை. உயர்குடி மக்கள் மணி விழாவின் பின் மணமக்கள் இம்மாளிகையிலே அரசனரசியின் திரு முன்னிலையில் அரசவையோருக்கும் மக்களுக்கும் அறிமுகப்