பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

45

படுத்தப்படுவது பிரஞ்சு நாட்டு மரபு. அம்முறையில் கோமான் சிட்னி சிரோம்மோனையும் கோமாட்டி சிரோம்மோனையும் அறிமுகப்படுத்தும் விழாவுக்காகவே இச்சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இத்தகைய கூட்டங்களுக்கு மட்டுமே வெளியேயெடுத்து வழங்கப்படும் பல உயர் சிறப்புப் பொருள்கள் இவ்வரண் மனையின் பக்க அறைகளில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றுள் ஆரஞ்சுப்பழம் போன்ற நிறமும் வடிவும் உடைய விளக்குகள் தனிப்படக் குறிக்கத்தக்கன. வெள்ளித் தொட்டிகளில் வெள்ளி பொன் வேலைப்பாட்டுடன் ஆரஞ்சு மரம் போலத் தோற்றும் படி செய்யப்பட்ட செயற்கை மரங்களில் ஆரஞ்சுப் பழங்கள் போலவே இவை தொங்கின. இத்தொட்டிகளனைத்தும் இன்று மாளிகை எங்கும் வரிசை வரிசையாகப் பரப்பி வைக்கப் பட்டிருந்தன. மண்டபத்தின் பலவகைச் சிங்காரப் பொருள்கள் மீதும் மாதர் ஆடவர் அணி மணி ஒப்பனை வண்ணங்களின் மீதும் அவை தம் அடங்கிய செவ்வொளியை வீசிக் கொண்டிருந்தன.

ஃபிரான்சு நாட்டில் பழைய ஐரோப்பாவின் நாகரிகம் உச்சநிலை அடைந்திருந்த காலம் இது. பதினான்காம் லூயியின் பேரரசு வெற்றிகளும் பெருஞ் செல்வமும் கலைவண்மையும் ஃபிரான்சையே ஐரோப்பாவின் தலை நிலமாகவும், பாரிஸை அதன் நடுமேடையாகவும் வேர் சேப்பாக்கத்தையும் அதன் அரண் மனையையும் அவற்றின் மேடை மையமாகவும் ஆக்கியிருந்தது. இந்நாகரிகம் மேலும் வளர்ச்சி எய்தவில்லை; ஆனால், அதன் பொலிவு குன்றவுமில்லை. செயற்கைப் பண்பையும் உயர்குடிப் பெருமையையும் மேற்பூச்சாகக் கொண்ட இச்செயற்கைப் பொழிவின் மாயப் பசப்பை ‘அகற்றவிருந்த ஃபிரஞ்சுப் புரட்சி இன்னும் இருபது ஆண்டுத் தொலைவிலேயேயிருந்தது. ஆயினும், அதன் முன்னறி குறிகள் இப்போதும் மறைவில் மினுங்கின. ரூசோ ஒருபுறமும் வால்த்தேர் ஒருபுறமும் கலைஞரிடையேயும் அறிஞரிடையேயும் உலவத் தொடங்கி இருந்தனர். தென்றலிடையே தோன்றிய இச்சிறு புயல் முகில்கள் வருங் காலத்தில் பெரும் புயலை எழுப்ப ஃபிரான்சை அல்லோலகல்லோலப் படுத்துவ துடன் அமையாது தன் வாடைக் குளிரால் உலகையே நடுங்கி ஆடச் செய்யும் என்று