பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

II-

அப்பாத்துரையம் - 30

இதற்குள் அவர்கள் ஏமாந்தே போயிருப்பார்கள். லாரைன்பால் அமைந்திருந்த அமைதி, மனநிறைவு, பெருமிதம் ஆகியவை இவ்வெண்ணங்களைச் சிதறடித்துவிட்டன. ஆகவே, அரசர் முன்னிலையில் அவள் பெருமை பெறுவது இரு திறத்தாருக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் நண்பர், தோழியர் இக்குறிப்பறிந்து நடக்கவும் தயங்கவில்லை.

பலர்

மணவிழாவில் மாது சிரோம்மோனின் மண ஆடை ஒப்பனையில் கருத்துச் செலுத்தியதைவிட இப்போது அவள் தோழியராக வந்து குழுமிய உறவினர் மிகுதி கவனம் செலுத்தினர். எவரிடமும் தன்மயமாக நடந்து கொள்ளும் இயல்புகொண்ட லாரைன் முதலில் அவர்கள் முயற்சிகளை வாய் பேசாமல்பொறுத்துக்கொண்டிருந்தாள். ஆனால், அதனிடையே எழுந்த போட்டியைப் பார்க்க, அவர்கள் ஒப்பனை என்றுமே முடியாத ஒப்பனையாய் விடுமோ என்று அவள் அஞ்ச வேண்டிய தாயிருந்தது. மயிரை வாடி முடிப்பாள் ஒருத்தி; தொங்கவிடுவாள் மற்றொருத்தி. வெள்ளாடை சார்த்துவாள் ஒருத்தி; அதனை அகற்றி நீல ஆடையுடுத்த வேண்டுமென்பாள் மற்றொரு மங்கை. இவையன்றி இருந்திருந்து அவள் கால்களும் அலுத்தன. காற்றோட்டம் வராமல் சூழ யாவரும் வந்து மொய்த்ததால், அவள் வியர்த்து விருவிருத்தாள். கடைசியில் அவளால் பொறுக்க முடியவில்லை. அவள் அருகிலிருந்தோர் கைகளைத் தட்டிவிட்டு எழுந்து நிமிர்ந்து நின்றாள் சிறிது கோபக் குறிப்புடன். அவள் விசிறி படபடத்தது!

அவள் திடீர் மாறுதல் தோழியாக நடத்த அவள் எதிரிகளைத் திகைக்க வைத்தது. அத்திகைப்புக் கலையுமுன் அவள் கூட்டத்தை ஊடுருவிச் சரேலென வெளியேறினாள். அவள் குறிப்பறிந்த தோழியும் உடன் சென்றாள்.

மீட்டும் தோழியர் சிறையுட்பட்டால், குறித்த நேரம் தவறித்தான் அரசவை சேர முடியும் என்பதை மாது சிராம்மோன் நன்றாக உணர்ந்துகொண்டாள். அக்காலத்தில் பெண்டிர் எப்போதும் தலைவலி மருந்து முதலியவற்றை ஒப்பனைப் பொருள்களுடன் வைத்துக் கொண்டிருந்தனர். தோழியர் குழுவின் நெருக்கடியால் ஏற்பட்ட சோர்வை அவள் அம் மருந்தால் தீர்த்துக் கொண்டு தன் இயற்கை ஆடையணிகளைத்