பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

அப்பாத்துரையம் - 30

எதிரிகள் தவிர மற்றவர்கள் புதிய மாது சிராம்மோனின் அமைந்த நிறை அழகையும் அவள் ஆடையணி நயத்தையும் நடையையும் போற்றிப் புகழ்ந்தாரவாரித்தனர். “நாட்டில் பிறந்த நல்ல மல்லிகை மலர் இவள். மலையிடையே பிறந்த மாசிலா மாணிக்கம்” என்றனர் பலர். 'நாட்டு மல்லிகை' என்ற அடை மொழி அவளைப் பற்றிப் பேசுபவர் நாவிலெல்லாம் ஊடாடி அவள் சிறப்புப் பெயராய் நாளடைவில் அமைந்துவிட்டது. இந்நாட்டு மல்லிகையின் முன் தோட்டத்து மல்லிகை எதுவும் மணம் பெறவில்லை.

மன்னர் பதினைந்தாம் லூயி பெண்களினும் நாணம் மிக்கவர். ஆனால், அவரைச் சூழ்ந்து மொய்த்த சூழ்ச்சிக் கும்பல் அவர் இறுமாப்புச் சிறுமையை வளர்த்து வந்தது. உலகம் ஃபிரான்சின் பேரரசைச் சார்ந்தும், ஃபிரான்சு தன் பேராற்றலைச் சார்ந்துமே இயங்குகிறதென்று அவர் நம்பி வந்தார். தம் நா அசைவது சட்டம்; தம் விரலசைவது ஆட்சி என்பது அவர் எண்ணம். ஆயினும் அவள் உள்ளத்திலும் நம் நாட்டில் ஒரு மாறுதல் ஏற்பட்டு வருகிறது என்ற எண்ணம் இருந்திருக்கக் கூடும். ஏனெனில் தம் தற்பெருமை தோன்ற அவர், “எனக்குப்பின் ஊழிக்கால அழிவுதான்" என்று கூறுவதுண்டாம்! அவர் உள்ளத்தைக் கவர்ந்து தவிசேற அரும்பாடுபட்ட காதற் கலையணங்காகிய அவர் துணைவியோ, அத்தவிசேறிய பின் தன் கலையைத் தனக்காகவே முழுதும் பயன்படுத்தினாள். அவள் ‘தனக்குப்பின் பேரூழி' என்றுகூட எண்ணியதில்லை. அவள் முடிவும் அதற்கேற்ப, கள்ளமிலா மன்னன் முடிவுபோலத் திடுமென நிகழவில்லை. தன்னைச் சூழ்ந்த பட்டுப்பூச்சிகள் ஆலகாலவிடத்தையே கக்க முடியும் என்பதை அவள் நன்கு கண்டனுபவித்த பின்னரே மாண்டாள்.

இன்று இம்மன்னனும் அரசியும் தம் கடைசிக் கொலு விருக்கையில் அமர்ந்திருந்தனர். கோமான், கோமாட்டி சிராம்மோன் இருவரும் அதன் பாராட்டுக்கு முழுதும் உரியவராயினர்.மணவிழாவுடன் மன்னனேற்ற விழாவும் இனிது

நிறைவேறிற்று.

பழைய ஃபிரான்சின் தங்குதடையற்ற இன்ப வாழ்நாளின் மாலைக் காலத்தில் மாலையிளங் கதிரவன் போல மாது