பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. கடல் நங்கை

நில உலகத்தைவிடக் கடலுலகம் மும்மடங்கு பெரிது, ஆழ் கடலுலகம் இன்னும் பல மடங்கு இடமகன்றது. அதில் எண்ணற்ற அழகுக் காட்சிகள் இருந்தன. எல்லையற்ற அருள்பொருட் செல்வங்கள் கொட்டிக்கிடந்தன. இந்த ஆழ்கடலுலகின் தலைநாயகமாய் அமைந்தது குமரிக்கடல், முத்தும் சங்கும் அதையே தம் தாயகமாகக் கொண்டிருந்தன. அங்கேயே அவை கருவீன்று செழித்துக் கொழித்தன. குமரிக்கோடு - பன்மலை போன்ற மலைத்தொடர்களும் கடலடியும் பவளப் பாறைகளுமாகவே அமைந்திருந்தன. ஆறுகள் போன்ற கடல் நீரோட்டங்கள் கடலுலக மெங்கணுமிருந்து வந்து, இவ்விடத்தில் பிணைந்து கலந்தன. பலவகை மணிக்கற்கள், ஆமைத் தோடுகள், திமிங்கில எலும்புகள், பாசிகள், சிப்பிகள் ஆகியவற்றை அவை அடித்துக் கொணர்ந்தன. மலைகள் அவற்றைத் தேக்கித் தம் அருகே படியவைத்தன.

குமரிக்கோடும் பன்மலையும் பின்னிப் பிணையும் இடத்தில் ஓர் அழகிய பவளப் பள்ளத்தாக்கு இருந்தது. அதுவே கடலுலகின் தலைநகர். கடலுலகில் வாழ்ந்த கடல் மக்கள் அங்கே பெருந்திரளாகக் குடியிருந்தார்கள். அவர்கள் உடலின் மேற்பகுதி மனிதர் உடல் போலவே இருந்தது. அத்துடன் அது மனித உடலைவிட அழகு மிக்கதாய் அமைந்தது. ஆயினும் அரைக்குக் கீழே அவர்களுக்குக் கால்கள் இல்லை, உடலின் அடிப்பகுதி முழுவதும் மீனுடலாயிருந்தது.

நிலஉலக மனிதர்களைவிட அவர்கள் நீண்டநாள் வாழ்ந்தனர். முப்பத்தைந்து ஆண்டளவிலேயே அவர்கள் ளமைப் பருவம் எய்தினர். அதன்பின் இருநூறு முந்நூறு ஆண்டுகள் வரை அவர்கள் வாழ்ந்தாலும், அவர்களை முதுமை தீண்டியதே கிடையாது. அவர்கள் வாழ்வு முழுவதும்