பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

---

அப்பாத்துரையம் - 32

இளமைமாறா வாழ்வாகவே இருந்தது. சிறு பருவத்தில் அவர்கள் உடல் முழுவதும் ஒரே படிக நிறமாய் விளங்கிற்று. ஆனால் கட்டிளமைப் பருவம் வந்ததும், உடலின் மேற்பகுதி வெள்ளி பொன் கலந்த பசும்பொன் மேனியாயிற்று. மீன் வால் போன்ற அடிப்பகுதியும் இளநீல நிறமாயிற்று.

கட்டிளமை விழாவிலே, இவ்வழகிய வடிவத்தை அவர்கள் ஆடையணிகளால் மேலும் அழகுபடுத்தினர். முத்துக்கோத்த ஆடையை அரையில் அணிந்தார்கள். நுரைகளாலான படிக நிற மேலாடை இட்டனர். இரண்டையும் செங்கழுநீர் வண்ணப் பட்டை ஒன்றால், இடுப்பில் இறுகக் கட்டினர். பச்சைப்பட்டுப் போல் நீரில் அசைந்தாடிய கூந்தலின்மீது ரு முடியிட்டனர்.

பொன்

இந்நிலையில் மீன்வடிவமான அவர்கள் உடலின் அடிப்பகுதி நன்கு புலப்படுவதில்லை. குலைப் பண்புடைய மக்கள் கண்களுக்கு அவர்கள் கடலின் அழகுத் தெய்வங்களாக அவ்வப்போது காட்சியளித்தார்கள்.

பவளப் பள்ளத்தாக்கின் நடுநாயகமாகக் கடலரசன் தண்பொருநன் மாளிகை அமைந்திருந்தது. அதன் அடித்தளம் ஆமைத் தோடுகளால் பாவப்பட்டுப் பளிங்கால் மூடப்பட்டிருந்தது. சுவர்கள் பன்னிறச் சலவைக் கற்களாலும் பளிங்குகளாலும் எழுப்பப்பட்டிருந்தன. திமிங்கில எலும்புகள் தந்தம்போல் இழைக்கப்பட்டு, அவற்றாலேயே தூண்கள், விட்டங்கள், உத்தரங்கள் உயற்றப்பட்டன. மேற்கூரை தட்டையாக ஒரு மட்டுப்பாவாய் அமைந்திருந்தது. அது முற்றிலும் உயிருள்ள முத்துச் சிப்பிகளால் பாவப்பட்டது. இதனால், மேலிருந்து பார்ப்பவர்களுக்கு மாளிகை சிறிதும் தென்படுவதில்லை. கடலடியின் முத்துச் சிப்பிகளிடையே அதுவும் முத்துச் சிப்பிகளின் ஒரு குவியலாகத் தோற்றிற்று. ஆயினும் நீரோட்டங்களின் அசைவுகளும் அலையியக்கங்களும் முத்துச் சிப்பிகளின் மேல்தோட்டை ஓயாது திறந்து

மூடிய வண்ணமிருந்தன. முத்துக்களின் தூய வெள்ளொளி எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. நீல நிறமும் செந்நிறமும் கலந்து செறிந்த இருள், நீராழத்தில் படர்ந்திருந்தது. இந்நீல இருளையும் செவ்விருளையும் கிழித்து வெள்ளொளி அலைகள்