பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6--

அப்பாத்துரையம் - 32

குழந்தைகள் அவற்றைக் கேட்டால் பேச்சிழந்து நாவடங்கிப் போவார்கள் என்று பெரியவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.

கட்டிளமை விழா முடிந்த பின்னரே இக்காட்சிகளைக் கடற் குழந்தைகள் சென்று காணலாம் என்று அவளுக்குக் கூறப்பட்டது. அந்நாளையே அவளும் அவள் தமக்கைமார் ஐவரும் ஆவலுடன் எதிர் பார்த்திருந்தனர்.

அவர்கள் எல்லாரும் முறையே ஒருவர்பின் ஒருவர் ஒரோர் ஆண்டு ளையவர்கள், ஆகவே முதல்முதல் கட்டிளமை எய்தும் பேறு மூத்த தமக்கையாகிய கோமாட்டிக்கே உரியதாய் இருந்தது. சீமாட்டி, திருவாட்டி, மால்விழி, சேல்விழி என்ற மற்றத் தமக்கையர்கள் மூத்தவளை அடுத்தும், வேல்விழி எல்லாருக்கும் பிற்பட்டுமே அந்த உரிமையைப் பெற வேண்டியதாயிருந்தது.

வேல்விழியையும் அவர் தமக்கையரையும் அவர்கள் அத்தை பொன்னாவிரை வளர்த்து வந்தாள். அவள், கடலுலகு பற்றியும் நிலவுலகு பற்றியும் பல செய்திகளும் கதைகளும் கூறி, அவர்கள் ஆர்வத்தை வளர்த்தாள். கோமாட்டி கட்டிளமைப் பருவமெய்தியதும், அவளைப் பொன்னாவிரை தன்னுடன் இட்டுச் சென்றாள். பின் நிலவுலகிலிருந்து கடலுலகத்தில் வந்து பாய்ந்த தண்பொருநையாற்றின் புதுமுகத்தில் அவளை நீராட்டினாள். எல்லாக் கடல்மக்களும் அங்கே வந்து கூடி ஆடிப்பாடினர். விழா முடிவில் நகரப்பரப்புக்கும் கரைக்கும் செல்லும் உரிமையின் சின்னமாக, அவளுக்கு ஆடையும் அரைப்பட்டியும் பொன்முடியும் வழங்கப்பட்டன. கடலுலக மெங்கும் கணத்தில் விரைந்து செல்வதற்காக ஒரு மின்சார விலாங்கு மீனும் அளிக்கப்பட்டது. அதன் மீதேறி அவள் களிப்புடன் கடற்பரப்புக்குத் தாவிச் சென்றாள்.

பொன்னாவிரை கூறிய கதைகளெல்லாம் பொய்யாகும் வண்ணம் கோமாட்டி தங்கையருக்குப் புத்தார்வக் கதைகள் கூறினாள். செங்கடல், கருங்கடல், வெண்கடல், பொன்கடல் ஆகியவற்றின் அரும் பொருள்களை அவள் வருணித்தாள். பல நிறப் பச்சை வண்ணத்துடன் குடைபோலச் சிறகு விரித்து நிலத்திலே ஆடிய ஒரு மீனைத் தமிழகக் கரையில் பார்த்ததாக