பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

அப்பாத்துரையம் - 32

சிறைப்படுத்யும் கப்பலில் வைத்தே நடத்த முனைந்தனர்.

கப்பலைப் பார்த்துவிட்டுத் திரும்பும் சமயத்தில், திடுமெனக் கடலதில் ஓர் ஓசை கேட்டது. அவள் கப்பலின் பக்கம் திரும்பிப் பார்த்தாள். கப்பலிலிருந்து பல வடிவுகளிலும் வண்ணத்திலும் தீச்சுடர்கள் வானை நோக்கி எழுந்தன. ஒன்று - பல நிறக்குமிழிகளாக எழுந்து உயர்ந்து வானத்தில் தாமரை மலர்போல் விரிந்து மலர்ந்தது. ஒன்று - நேரே மேலே சென்று ஒளிப்பொறிகளை வாரி இறைத்தது. சில - பாம்புபோல் சீறிப் பொறி வீசிச் சென்று வானில் ஓவிய வடிவங்களாக வெடித்தன.

இக்காட்சிகளை அவள் என்றும் கண்டதுமில்லை; அவற்றைப் பற்றி கேட்டதோ, கனவு கண்டதோ கூட இல்லை. அவற்றைக் காணும் ஆர்வம் அவளை நீர்ப்பரப்பில் மிதக்க வைத்தது. அதே சமயம், அச்சம் அவளை முன்னேறிச் செல்ல விடவில்லை. மல்லாந்து நீரில் படுத்தபடியே அவள் வானத்தின் வாணவேடிக்கைகளைப் பார்த்திருந்தாள்.

கடைசி வாணவெடி வானமெங்கும் பரவிற்று. பல திசைகளிலிருந்தும் ஒளிப்பொறிகளைச் சிதறிற்று. அவளை நோக்கி நாற்புறமிருந்தும் நெருப்புப் பிழம்புகள் மழைபோல் பொழிந்தன. ஒருகணம் அவள் கண்கள் கூசின, கூசின, அவள் தன்னையறியாது வீறிட்டாள்; கண்களை மூடினாள்.

அவள் கண்களைத் திறந்தபோது எல்லாம் அடங்கி யிருந்தன. கப்பலில் விளக்குகள் குறைவாகவே இருந்தன. ஆனால் ஒரு பலகணி இன்னும் ஒளிக்கதிர் பரப்பிக் கொண்டுதான் இருந்தது. அதன் வழியே ஓர் அழகுருவம் கடலில் அவள் இருந்த திசை நோக்கி நின்றிருந்தது. அது போன்ற ஓர் எழில் வடிவை அவள் அதற்குமுன் பார்த்ததில்லை. காந்தம்போல் அது அவளைத் தன்னைநோக்கி இழுத்ததென்று அவள் கருதினாள்.

அந்த உருவம் அவளைப் பார்த்ததாகத் தெரியவில்லை. ஆயினும் அது அலைகளையே கூர்ந்து கவனித்த வண்ணம் இருந்தது. அவள் கப்பலின் பக்கமாகச் சென்றாள். புற விளிம்பை அடுத்து இருள் கவ்விக் கிடந்தது. அதனூடாக அவள் பலகணியின் பக்கம் சென்றாள். பலகணியில் கண்ட வடிவம் அவளிடமிருந்து மூன்று முழத்தொலைவிலேயே நின்றிருந்தது.