பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

13

அவள் விரும்பவில்லை. அவள் தயங்கினாள். சுற்றுமுற்றும் பார்த்தாள்.

அருகிலே இருந்த வள்ளியம்மன் கோயிலில் வழி பாடாற்றி விட்டுச் சில பெண்கள் அவ்வழியே சென்று கொண்டிருந்தார். வேல்விழி மெல்ல அலைகளில் நுழைந்து ஓர் அலைமுகட்டில் தலைநீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். நங்கையர் இளவரசனைக் கண்டும் காணாதவர்கள் போல் போய்விட்டனர். ஆனால் அழகுமிக்க ஒரு நங்கை அவனைக் கடக்கும்போது பின்னால் பார்த்துக் கொண்டே சென்றாள். சிறிது தொலைவு சென்றதும், அவள் ஏதோ சாக்கிட்டு மற்ற நங்கையரை அனுப்பிவிட்டுத் திரும்பினாள்.

இளவரசன் அப்போதுதான் விழித்துக் கொண்டிருந்தான். அவள் அவனை ஆவலுடன் அணைத்து ஆதரவு காட்டினாள். அவனும் நன்றிமிக்க கண்களுடன் அவளைப் பார்த்தான்.

ளவரசன் கடலில் மிதக்கும்போது அவனுக்கு அரையுணர்வு இருந்தது. கடலிலிருந்து யாரோ ஒரு பெண் தன்னை அழைத்து எடுத்து சென்றதை அவன் உணர்ந்திருந்தான். ஆனால் கரைக்கு வருமுன் அவன் உணர்வு முற்றிலும் அகன்றது. மீட்டும் உணர்வு வந்து கண்விழித்த போது, அவன் தன்னருகே ஒரு நங்கையைக் கண்டான். கடலுலகத்திலிருந்து தன்னை மீண்டது ஒரு கடல் நங்கையாகவே இருக்க வேண்டும் என்று முதலில் அவன் கருதியிருந்தான். ஆனால் இப்போது அவன் தன் கருத்தை மாற்றிக் கொண்டான். தன் அருகிலிருந்த நிலவுலக

மாதரசியே தன்னை நடுக்கடலிலிருந்து மீட்டிருக்க

வேண்டுமென்று அவன் எண்ணினான்.

செழுங்கோவின் உள்ளக் குறிப்பை வேல்விழி ஊகிக்க முடிந்தது. தன்னால் விரும்பப்பட்டவனைக் காத்து விட்ட மகிழ்ச்சி அவளுக்கு இருந்தது. ஆனால், இன்னொருத்தி அதன் நன்றியைப் பெற்றது அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் இளவரசன் நிலவுலக மனிதன். அவன் தன்னிலையடைந்து வாழும்படி செய்ய அவளுக்கு வேறு வழியில்லை. அவள் தன் உயிரை நிலவுலகிலே உலவ விட்டு, உடலை மட்டும் கடலடிக்குக் கொண்டு சென்றாள். வேல்விழியின் உடல் அன்று முதல் ஆழ்கடலில் அமையவில்லை. அது இளவரசன் கரையேறிய