பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

15

ஒரு

தன் கருத்துகளை அவள் யாரிடமும் கூறவில்லை. ஆனால் அவள் போக்கும் தோற்றமுமே அவளைக் காட்டிக் கொடுத்தன. தமக்கையர் மெல்ல மெல்ல அவள் செய்தி அறிந்தார்கள். நிலஉலக மனிதனிடம் கடல்நங்கை எப்படிப் பாசம் கொள்ள முடியும் என்று அவர்களால் உணர முடியவில்லை. ஆயினும் தங்கையின் நிலைகண்டு அவர்கள் அரும்பாடு பட்டார்கள். அன்பு கனிந்த சொற்களால் அவள் உள்ளத்தின் உடன்பிறப்புப் பாசத்தை இயக்கிப் பார்த்தார்கள். கெஞ்சிப் பார்த்தார்கள். ஒன்றும் பயன்தரவில்லை. “இந்த ஆடவனை எப்படிப்பெறுவது? அதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்ற பல்லவியையே அவள் மீண்டும் மீண்டும் பாடினாள்.

அவள் துயரங்கண்டு தமக்கையரால் வாளா இருக்க முடியவில்லை. ஆனால் அவளுக்கு உதவும் வகைகளும் அவர் களுக்கு விளங்கவில்லை. அத்தை பொன்னாவிரையிடமே சென்று அவர்கள் உதவிகோரினர். பொன்னாவிரை அனுபவமிக்கவள். வேல்விழியிடம் அவள் உயிரையே வைத்திருந்தாள். அவள் கவலையுடன் வேல்விழியை ஆர அணைத்துக் கொண்டாள்.

66

'கண்மணி, உன் புதுமையான ஆவல் கண்டு நான் கவலைப் படுகிறேன். மனிதருடன் வாழ வேண்டுமானால், மனிதராகித் தீரவேண்டும். அது நன்றன்று; எளிதுமன்று, கடலுலகின் இன்பங் களையும் நீண்ட வாழ்வையும் மட்டுமல்ல; உன் இனிய குரலையும் கூட நீ இழக்க வேண்டி வரும்; குறுகிய மனித வாழ்நாளில்கூட, எல்லையற்ற துன்பங்களைத் தாங்க வேண்டியதாய் நேரும்; அது மட்டுமன்று, இத்தனை விலைகொடுத்தும் உன் விருப்பம் நிறைவேறிவிடும் என்று உறுதியில்லை. அழகு ஒன்றை நினைத்து, ஊமையாகிய ஓர் ஊர் பேர் தெரியாப் பெண்ணை இளவரசன் விரும்புவான் என்பதில் என்ன உறுதி இருக்கிறது? விரும்பி மணந்துகொள்ள அவன் இசைவான் என்பதும் எதிர்பார்க்கத் தக்கதா?

66

'இதை நான் சொல்வதற்காக வருந்தாதே; ஏனெனில், அவன் விரும்பாவிட்டாலும் சரி; அல்லது அவனோ, உறவினரோ மணவினையை மறுத்தாலும் சரி; உன் மனித வாழ்வுக்கும் ஊறு ஏற்பட்டுவிடும். அவன் இன்னொரு பெண்ணை விரும்புகிற அந்தக் கணமே உன் உடலில் கடலகத்தின் மின்சார காந்த