பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

21

வேல் விழியைத் துன்பத் தீயிலும் இன்பக் கடலிலும் மாறி மாறி மூழ்குவித்தன. அவள் இளவரசன் உள்ளத்தில் மாறா இடம் பெற்றுவிடுதற்காகப் போராடினாள்.

முன்பு செழுங்கோ

கடலலையில்

உயிருக்காகப் போராடினான். வேல்விழி தானாகச் சென்று அவனுக்கு உதவினாள். இப்போது வேல்விழி வேறொருவகைப் புயலில் மிதந்து தத்தளித்தாள். இன்று அவன் தனக்குக் கைகொடுத்து உதவ மாட்டானா என்று அவள் ஏங்கினாள். நாவின் உதவியில்லாமல் அவள் பேச முடியவில்லை. தன் கருத்தைத் தனக்குள்ளேயே ஓடவிட்டு, அவள் சிந்தனைச் சுழல்களில் உழன்றாள்.

இளவரசன் பெரும்பாலும் அவளுடனேயே இருந்து இன்பமாகப் பொழுதைக் கழித்து வந்தான். ஆனால், சிலசமயம் அரசியல் அலுவல்கள் அவனை அவளிடமிருந்து பிரித்தன. அப்போதெல்லாம் அவள் அனல்பட்ட தளிராகத் தத்தளித்தாள். சிலசமயம் மாலைப்போதுகளில் கூட அவன் அவளில்லாமல் உலவச் சென்றுவிடுவான். இவ்வேளைகள் அவள் உச்ச அளவில் துன்புற்ற வேளைகளாய் அமைந்தன. ஏனென்றால், இத்தகைய மாலை உலாக்கழிந்து மீண்டபின்பு இளவரசன் பல கணங்கள் அவளைப் பாராமல் இருந்து வந்தான். ஒரு தடவை மாலை உலாச்சென்று இரவு அவன் மீளவே இல்லை. காலையிலேயே மீண்டான். ஆனால், வழக்கம்போல் அவன் ஒதுங்கியிருக்க வில்லை. அன்று ஆர்வமாக அவளை எடுத்து மடிமீது வைத்துக் கொண்டான். தலைமுடியை நீவி, நெற்றியைத் தடவினான். அன்று அன்பொழுக அவன் பேசினான்.

"அன்பே நீ தான் என்னைக் காத்தவள் என்பதை நான் இன்றுதான் உணர்ந்தேன். திருகுவளையை நான் இன்று கண்டேன். கடலிலிருந்து என்னை நீதானே மீட்டுக் கரை சேர்த்தாய் என்று கேட்டேன். அவள் விழித்தாள். கரையிலே தான் அவள் என்னைக் கண்டதாகக் கூறினாள் கடல் நடுவிலிருந்து என்னைக் கரைக்குக் கொண்டுவந்த கடல் தெய்வம் நீயே என்று கண்டு கொண்டேன். உனக்கு என் உயிர் உரியது. உன் அழகும் திருகுவளையின் அழகில் சிறிதும் குறைந்ததன்று, அவளை நான் காணாவிட்டால், உன்னையே அவளாகக் கொண்டிருப்பேன்.