பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

அப்பாத்துரையம் - 32

கொண்டிருந்தனர். பின் இளவரசி புறப்பட்டாள். புறப்படும் சமயம் அவள் புதிதாக தன்னை நாடிவந்த இளைஞனைப் பற்றிக் கூறினாள்.

மாயாவி கண்கள் ஒளி வீசின.” ஆகா, நன்று-நன்று புதிய விருந்துதான் நாளை! விரைந்து அவன் கதையை முடித்து விட்டுவா!” என்றான்.

“அவனிடம் என்ன கேள்வி கேட்பது?” என்று அவள்

கேட்டாள்.

“சிந்தனைக்கு எட்டாதவை சிறுபொருள்கள்தாம். இதோ உன்காலில் இருக்கும் செருப்பை நினைத்துக் கொள். என்ன நினைக்கிறேன்? என்று கேள். அவன் தலை நாளை உன் உணவு மேடைக்கு வருவது உறுதி” என்றான்.

அவள் விடைபெற்று மீண்டாள். வழித்துணை வேலன் கழி, முன்பே அரைகுறையாக நைந்திருந்தது. திரும்பும்போது அது முற்றிலும் தும்புதும்பாகுமட்டும் அவன் அவளை அடித்தான். அவள் பலகணி வழியாகப் புகுந்து அரண்மனைக்குள் மறைந்தாள். அடிபட்ட வேதனையாலும் வழித்துணை வேலன் காலையில் இளஞ்சாத்தனைத் துயிலெழுப்பினான். “அப்பனே, நீ வெற்றி பெறுவாய் என்று ஏதோ ஒன்று எனக்குக் கூறுகிறது. நான் ஒரு கனவு கண்டேன்; அதை யாரிடமும் சொல்லாதே; நான் நினைப்பது என் கால்மிதியடி என்று இளவரசி கூறியதாகக் கனவு கண்டேன்” என்றான்.

“மிக்க மகிழ்ச்சி, உன் வாக்கையே நான் கடவுள் உதவிய தெய்வ வாக்காகக் கொள்வேன்” என்று இளஞ் சாத்தன் அவனை அணைத்துக்கொண்டான்.

தேர்வு முடிவில் நகரத்தில் யாருக்குமே நம்பிக்கையில்லை. அன்று நடக்க இருக்கும் கோரப் பலியை எண்ணி நகரமாந்தர் கண்ணீர் விட்டனர். அரசன் முகம் சிந்தனையால் சோர்வுற்றி ருந்தது. இளவரசி அவன்முன் வந்து நின்றாள். இளஞ்சாத்தன் ஓருவன் முகம் மட்டுமே கவலையற்றிருந்தது.

இறுமாந்த தொனியுடன் இளவரசி குரலெழுப்பினாள். "நான் இப்போது என்ன நினைக்கிறேன். அதைக் கூறினால் நன்று. கூறா விட்டால், திட்டப்படி நீர் உயிரிழக்க வேண்டும்" என்றாள்.