பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர் கதைக் களஞ்சியம்-1

ளவரசி, நீங்கள் நினைப்பது உங்கள் மிதியடியை” என்று அவன் அமைதியுடன் கூறினான்.

39

கால்

அவள் முகம் சுண்டிற்று. தலையிறங்கிற்று. "ஆம், இன்று தப்பினீர்!” என்றாள்.

பல ஆண்டுகளுக்கிடையே முதல் தடவையாக அரசன் பாரி இளநாகன் முகத்தில் சிறுநகை ஒளிவீசிற்று. ஆனால் அது விரைவில் மறைந்தது. “இன்றைய பலிதான் தப்பிற்று. இன்னும் இரண்டு தவணைகள் இருக்கின்றனவே" என்ற எண்ணம் மறுபடியும் அவனைத் துயரில் தள்ளிற்று.

மக்கள் உள்ளத்தில் புது நம்பிக்கை எழுந்தது. ஆனாலும் மறுநாள் பற்றிய அச்சமும் இருந்தது. புதிய இளைஞன் வெல்வானா, மாட்டானா என்ற கவலையுடன் அவர்கள் ஒரிரவு கழித்தனர்.

முன்னாள் போலவே யாவும் அடுத்த நாளும் நடந்தது. இரண்டாவது நாளும் வேப்பங்கழி அந்த இளவரசியை மீட்டும் குற்றுயிராக்கிற்று. ஆனால் அவள் பயணத்தை நிறுத்தவில்ல. மாயாவியிடம் சென்று யாவும் உரைத்தாள். இளவரசியின் எண்ணத்தை இளைஞன் சரியாக ஊகித்தது கேட்டு, மாயாவி வியப்படைந்தான். “சரி, எப்படியும் நாளைத் தப்பமாட்டான்' என்று அவன் கறுவினான். இளவரசியிடம் கடைசிநேரம் வரை அவன் எதுவும் கூறவில்லை. ஆழ்ந்து சிந்தித்தான். மலைப்பாறை வரை அவன் அவளைத் தொடர்ந்து வந்து, காதுடன் காதாக “உன் கையுறை” என்று மெல்லக் கூறினான்.

இத்தடவையும் வழித்துணைவேலன் மறுமொழியைக் கனவாகவே நண்பனிடம் கூறினான்.

முதல்நாள் வெற்றி மக்கள் ஆர்வத்தைக் கிளறியிருந்தது. ஆகவே மறுநாள் அரண்மனையில் உள்ளும் புறமும் மக்கள் குழுவி அவாவுடன் தேர்வு முடிவை எதிர்பார்த்திருந்தனர்.

இளவரசியின் முகம் சற்று வாடியிருந்தது. அவள் முன்போலவே கேள்வி கேட்டாள். “உங்கள் கையுறை” என்று குரல் கேட்டு அவள் முகம் ஒளியிழந்தது. ஆனால் அரசன் அன்று சிறுபிள்ளை போலத் துள்ளிக் குதித்தெழுந்தான். “இன்னும் ஒரு