பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3. இளவேனில்

சேர நாட்டில் காந்தளூர் ஒரு பழங்காலத் துறைமுகப் பட்டினம். அதில் பூணாரம் என்றொரு செல்வ வணிகன் இருந்தான். அவனுக்குப் பூமாலை என்னும் பொற்புடை மனைவியும், பொன் முடி, பொன்மணி என்று இரு புதல்வர்களும் இருந்தனர். பொன்முடியும், பொன்மணியும் சிறுவர்களாய் இருக்கும்போதே பூமாலை காலமானாள்.வணிகன் இதன்பின் மையார்விழி என்ற மற்றொரு நங்கையை மணங்செய்து கொண்டான்.

மாற்றந்தாயான

மையார்விழியிடம் ம்

பலவகையிலும் அவதியுற்றார்கள்.

சிறுவர்கள்

பொன்முடியும் பொன்மணியும் இணைபிரியா அன்புடைய வரா யிருந்தனர். பொன்முடிக்கு வயது வந்த போது, பூணாரம் அவனுக்கு இளவேனில் என்ற நற்குடி நங்கையை மணஞ் ஞ் செய்வித்தான். அவள் கணவனிடம் எல்லையற்ற பாசங் கொண்டிருந்தாள். கணவன் தம்பியாகிய பொன்மணியிடமும் அவள் மிகுந்த பரிவு காட்டினாள். ஆனால் இளைஞர்கள் இருவரையும் போலவே அவளும் மையார்விழியின் வெறுப்புக்கும் கடுகடுப்புக்கும் ஆளானாள்.

பூணாரத்துக்குப் புதல்வர்களிடம் இயற்கைப் பாசம் மிகுதியாகவே இருந்தது. ஆனால் புது மனைவியின் வழிப்பட்டு அவர்கள்மீது அவன் அக்கறை குறைந்து வந்தது. அதே சமயம் மையார்விழியைவிட இளவேனில் திறமையும் பண்புமுடைய வளாயிருப்பது கண்டு, அவள் வீட்டுப் பொறுப்பைப் பெரிதும் அவளிடமே ஒப்படைத்தான். இது அவள் மீதும் பிள்ளைகள் மீதும் மையார்விழிக்கு இருந்து வந்த குறுகுறுப்பைப் பெருக்கிற்று.

ஒருநாள் காடுகாவலன் ஒருவன் வணிகனைக் காண வந்திருந்தான். வணிகனுக்கு அன்புப் பரிசாக அவன் ஓர் உயர்