பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

அப்பாத்துரையம் - 32

சற்று முன்னோ பின்னோ, அவள் கூறியபடி செய்து விடுவாள் என்றே இளவேனில் அஞ்சினாள். ஆகவே அவள் தன் கணவனையும் கணவனின் தம்பியையும் எச்சரித்து அன்றே வெளியேறும்படி தூண்டினாள். சமைத்து வைத்திருந்த வருக்கையில் இளைஞருக்கு ஒரு பகுதியைக் கொடுத்து உண்பித்தாள். ஒரு பகுதியை மாமனுக்கென மூடி வைத்தாள்.

மனைவியின் நகைகளையும் ஒரு குதிரையையும் எடுத்துக் கொண்டு, பொன்முடி மனைவியுடனும் தம்பியுடனும் இரவே வெளிக்கிளம்பி அயல்நாடுகள் சென்றான்.

வணிகனுக்கு வைத்திருந்த வகை உணவை இரவே பூனை தின்று விட்டது. 'பிள்ளைகளே அத்தனையையும் தின்றுவிட்டு இரவே ஓடினர்' என்று மையார் விழி கதைகட்டினாள். வணிகன் சீற்றத்துடன் அவர்களை எங்கும் தேடும்படி ஆள் அனுப்பினான். ஆனால் அவர்கள் சென்ற குதிரை உயர்ந்த ‘வாம்பரி' ஆதலால், அவர்கள் நெடுந்தொலை சென்றுவிட்டனர்.

அவர்கள் பல ஊர்களும் நாடுகளும் கடந்து பலநாள் பயணம் செய்தனர். இளவேனில் அச்சமயம் நிறை கருவுற்றிருந் ததனால் அவர்கள் வேகம் தடைப்பட்டது. இறுதியில் அவர்கள் ஒரு காட்டாற்றின் கரையை அணுகினர். அவ்விடத்திலே இளவேனில் வயிற்றுநோவு மிகுந்தது. அவள் உணர்விழந்த நிலையில் ஒரு மரத்தடியில் சாய்ந்தாள்.ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள்.

குளிர் மிகுந்த அந்தக் காட்டுவெளியில் தாய்க்கும் பிள்ளைக்கும் குளிர்ப்பாதுகாப்புக்கு நெருப்பு உயிர்த்தேவையாய் இருந்தது. காட்டில் உலர்ந்த கள்ளிகள் எளிதாகக் கிடைத்தன. ஆனால் அவர்களிடமிருந்த நெருப்புக்குச்சிகள் முன்பே செலவாய்விட்டன. நெருப்புப் பெட்டி. அல்லது நெருப்புத் தேடிக் கொணரும்படி பொன்முடி சென்றான். இளவேனிலைப் பொன் மணியின் பாதுகாப்பிலேயே விட்டுச் சென்றான்.

ளவேனில் உணர்வற்ற நிலையிலேயே கிடந்தாள். குளிர் மிகுதியால் குழந்தைகூட அழவில்லை. எந்த நேரமும் போன அண்ணன் திரும்பி வருவான் என்று பொன்மணி மணிக்கணக் காகக் காத்திருந்தான். பின் பொறுமையிழந்தான். ஆற்று