பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

|-

அப்பாத்துரையம் - 33

இப்போது திம்மப்பனை விடச் செல்வியே மந்திரக் கல்லைத் தர மாட்டேன் என்று வாதாடினாள். ஆனால், திருடர்கள் இப்போது அவளை உண்மையிலேயே தங்கைப் பாசத்துடன் இரந்து, வேண்டினர், “அண்ணிமார் அத்தனை பேர் நகைகளையும் தந்தால், இந்தக் கல்லைத் தருவேன்” என்றாள் அவள்.

திருடர் அனைவரிலும் இளையவனான ஒருவன் சென்று நயமாகப் பேசித் திருடர் மனைவியரின் நகைகளை வாங்கிக் கொண்டு வந்தான். திருடர் அனைவரும் காவல்காரர்களிடம் சிக்கி விட்டதாகப் பொய் சொல்லியே அவற்றை அவன் பெற முடிந்தது.

அத்தனை நகைகளையும் கொடுத்துவிட்டு, ஒரு கல்லை மிகுந்த நன் மதிப்புடன் எடுத்துக் கொண்டு திருடர் வீடு வந்தனர்.

மனைவியர் நடந்த செய்திகள் பற்றி ஆவலாகக் கேள்விகள் கேட்டனர். மந்தரக்கல்லின் கதையை அவர்களால் நம்ப முடியவில்லை. "இது முன்போல ஏதாவது ஏமாற்றாகத்தான் இருக்கக் கூடும்” என்றார்கள்.

மூத்த திருடன், "அப்படி ஐயப்படவே தேவையில்லை, நாங்கள் கண்ணாரப் பார்த்தோம், அவன் செல்வியை தடி கொண்டு பல அடி அடித்துக் கொன்றுவிட்டான். பின் மந்திரக் கல்லால் மூக்கில் மூன்று தட்டுத் தட்டினான். எமதரும் ராசாவிடம் சென்ற அவள் உயிர் எழுந்து ‘எமதருமராசா' என்றும் அழைத்தாள்” என்றான்.

அப்போதும் அவர்கள் ஐயம் தீரவில்லை.

அவனை

"வேண்டுமென்றால், உங்களில் ஒருத்தியைக் கொன்று உயிர் வருவித்துக் காட்டுகிறேன்" என்றான் எல்லாரையும்விட இளையவனான திருடன்.

ஆனால், தங்கள் உயிரைப் புடம் போட மனைவியர் யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. “ஏன் உங்களில் ஒருவரைக் கொன்று உயிர் வருவிப்பது தானே" என்றாள் இளைய திருடன் மனைவி.

66

"ஒருவரை என்ன அத்தனை பேரையும் நீங்கள் கொல்லுங்கள். பின் மறக்காமல் மந்திரக் கல்லால் பிழைக்க வையுங்கள்” என்றான் மூத்த திருடன்.