பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

79

மனைவியர் ஆளுக்கு ஒரு குழவிக் கல்லைக் கொண்டு வந்தனர். அவரவர் கணவன்மாரை அவரவரே அம்மிக் குழவியால் அடித்துக்கொன்றனர். பின் ஒவ்வொருவரும் மந்திரக் கல்லால் மூக்கை மூன்று தரம் தட்டிப் பார்த்தனர். எவரும் உயிர் பெற்று மீளவில்லை.

மூன்று தடவைக்கு முப்பத்து மூன்று தடவை தட்டிப் பார்த்தும் பயனில்லை. பெண்கள் எல்லாரும் அழலானார்கள். மூத்த திருடன் மனைவி ஒருவாறு தேறினாள்.

“தங்கைமார்களே, இந்த மூடர்கள் ஓயாமல் ஏமாந்து வந்தவர்கள். அவர்கள் சாகாமலிருந்தாலும் எப்போதும் இந்த ஏமாற்றுகளுக்கு ஆளாகி நமக்குத் தொல்லைதான் தருவார்கள். இப்போது அவர்கள் மடத்தனத்துக்கு நம்மைப் பலியாக்காமல், அவர்களே பலியானார்கள். போய்த் தொலையட்டும். மிச்சமிருக்கும் பணத்தைக் கொண்டு நம் தாய் தந்தை உறவினரைக் கண்டுபிடித்து, இனியாவது திருடர் வீட்டுப் பெண்களாயிராமல் நல்ல வீட்டு பெண்களாயிருப்போம்" என்றாள்.

அவள் அறிவுமதியை அனைவரும் பின்பற்றினர். அவர்கள் பணம் அவர்களுக்குச் சமூகத்தில் இடம் அளித்தது. அவர்கள் திருந்திய குணம் விரைவில் அவர்களுக்கும் புது வாழ்வு தந்தது.

திருடர்கள் திரும்பவும் வரக்கூடும் என்று திம்மப்பனும் செல்வியும் எதிர்பார்த்திருந்தனர். பின் நடந்த செய்தின அவர்கள் கேட்டறிந்து கவலையற்று வாழ்ந்தனர். திருடர் மனைவியர்கள் திருந்தியது கேட்டு, அவர்கள் அந்தப் பெண்களையும் சென்று கண்டு நல்லுறவாடி வாழ்ந்தனர்.