பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




11. நம்பியின் நண்பர்கள்

நம்பி ஒரு சிறு பையன். அவனுடன் விளையாட அவனுக்குத் தம்பி தங்கை இல்லை. ஆனால், அவன் அன்பு உள்ளம் படைத்தவன். சின்னஞ்சிறு பறவைகளுடனும், உயிரினங் களுடனும் அவன் விளையாடினான்.

ஒருநாள் நம்பி அடுத்த ஊருக்குப் போய்க் கொண்டிருந்தான். வழியில் ஒரு முரட்டுப் பையன் ஒரு பறவையைப் பிடித்துத் துன்புறுத்திக் கொண்டிருந்தான். பறவையிடம் நம்பிக்கு இரக்கம் ஏற்பட்டது. அதை விட்டுவிடும்படி அவன் அந்தப் பையனிடம் கெஞ்சினான்.

66

என்னிடம் இருந்த கடலையையெல்லாம் இந்தப் பொல்லாத பறவை சிந்தி விட்டது. அதை விட மாட்டேன்” என்றான் பையன்.

"இந்தா! வேறு கடலை வாங்கிக் கொள், பறவையை விட்டுவிடு” என்று கூறி, நம்பி ஒரு காசை எடுத்துக் கொடுத்தான். அது அவன் கடலை வாங்க வைத்திருந்த காசு.

பையன் பறவையை விட்டுவிட்டான். அது மகிழ்ச்சியுடன் பறந்தோடிற்று. ஆனால், சிறிது நேரம் கழித்து அது நம்பியின் பின்னாலேயே பறந்து வந்து, அவனுடன் விளையாடிற்று.“உனக்கு இனி நான் ஒரு தங்கை போல் இருப்பேன். நீ கூப்பிட்ட போதெல்லாம் வந்து உன்னுடன் விளையாடுவேன். உனக்கு என்னால் இயன்ற உதவி செய்வேன்” என்று அந்தப் பறவை கூறிற்று.

நம்பி சிறிது பெரிய பையனாக வளர்ந்து விட்டான். அப்போது அவன் வாய்க்கால்கரை வழியே போய்க் கொண்டிருந்தான். சில பையன்கள் ஒரு தவளையைக் கல்லால் எறிந்து கொண்டிருந்தார்கள். நம்பிக்குத் தவளை மீது இரக்கம்