பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

89

ஏற்பட்டது. தவளை மீது கல் எறிய வேண்டாம் என்று அவன் பையன்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

ஒன்றிரண்டு பையன்கள் “சரி” என்றார்கள்.ஆனால், மற்றப் பையன்கள் கேட்கவில்லை. “தவளை மீது நாங்கள் கல் எறிந்தால், உனக்கென்ன? தவளை உனக்குத் தம்பியா?” என்று கேட்டு அவர்கள் அவனைக் கேலி செய்தார்கள்.

நம்பி, அவர்கள் கேலியைப் பொருட்படுத்தவில்லை. அவன் தன் சட்டைப் பையில் கையை விட்டுத் துழாவினான். அதில் அவன் மாமன் கொடுத்த முந்திரிப் பருப்புகள் இருந்தன.

அவன் அவற்றைக் கையில் எடுத்தான்.“கல் எறியாத பையன் ஒவ்வொருவனுக்கும் இரண்டு முந்திரிப் பருப்புத் தருகிறேன்”

என்றான்.

“நான் எறியவில்லை. நான் எறியவில்லை” என்று சொல்லிய வண்ணம் அவர்கள் தலைக்கு இரண்டு முந்திரிப் பருப்பு வாங்கிக் கொண்டு போனார்கள்.

தவளை உயிருடன் தப்பிற்று. “நான் இனி உனக்குத் தம்பி தான். உனக்கு எப்போதும் நான் உதவி செய்வேன். உனக்கு வேண்டியபோது அந்த ஒரு பறவையிடம் சொல்லியனுப்பு' என்றது.

""

நம்பி பெரியவனானான். அப்போது அவன் அயலூர் ஒன்றுக்குச் சென்றான். அந்த ஊரார் ஒரு மானைச் சூழ்ந்து அடித்துக் கொல்ல முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். நம்பிக்கு மான் மீது இரக்கம் உண்டாயிற்று. அந்த மானை விட்டு விடும்படி அவன் வேண்டினான்.

"இது எங்கள் வயல்களைத் தின்றழித்தது. அதை நாங்கள் கொன்று தின்னாமல் விடப் போவதில்லை” என்று அவ்வூரார்

சொன்னார்கள்.

நம்பிக்கு இன்னது செய்வதென்று புரியவில்லை. மானைச் சாகவிடவும் அவனுக்கு மனமில்லை. அவன் சிறிது சிந்தித்தான்.

ஒரு குறும்பன் நம்பியைப் பார்த்து நையாண்டி செய்தான். “மான் உன் அத்தை மகளா? அதற்காக உனக்கு ஏன் இவ்வளவு கரிசனை?” என்றான்.